அண்மைய செய்திகள்

recent
-

நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் -


திருகோணமலை - கோணேஸ்வர ஆலயத்தில் கடமையாற்றி வந்த விஸ்வகேஸ்வர குருக்களினால் கொலை செய்யப்பட்ட மனைவியின் எலும்புக்கூடுகள் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (05) அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை கோணேஸ்வர கோயிலில் குருக்களாக கடமையாற்றிய விஸ்வகேஸ்வர கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மனைவியை கொலை செய்தமை தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் இவ்வழக்கு தொடர்பில் குருக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனாலும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரி என உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தப்படுத்தியது.

இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 19ஆம் திகதி குறித்த குருக்களை நீதிமன்றத்துக்கு அழைத்து அவரது மனைவியின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அதனை எடுத்துச் செல்கிறீர்களா எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பினார்.
ஆனாலும், அவர் தனது மகன் விஸ்வகேஸர் வெங்கடேஸ்வரர் சர்மாவிடம் ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து இன்று திருகோணமலை நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து எலும்புக்கூடு மற்றும் சில சான்றுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

அதில் அல்பங்கள், டயரி மற்றும் பிராமணர் தாலிக்கொடி, நூல் மற்றும் பழைய புடவை கொண்ட பெட்டி என்பவற்றை அவரது மகனிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட எலும்புக்கூட்டை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அங்கு காவடி தெற்கு கொக்குவில் என்ற பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று காவடி தெற்கு இந்து மயானத்தில் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் - Reviewed by Author on August 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.