அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாந்திபுரத்தில் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்க வேண்டாம்.சாள்ஸ்MP

மன்னார் நகர் சாந்திபுரத்தில் பொது தேவைகளுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை எவ்வித முன்னறிவித்தல் மற்றும் காணிக் கச்சேரியின்றி அக் கிராமத்தை சாராதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் நேரடியாகச் சென்று முறையீடு செய்துள்ளனர்.

இது விடயமாக மன்னார் சாந்திபுரம் மக்கள் நேற்று முன் தினம் செவ்வாய்
கிழமை (13.08.2019) வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம் சென்று முறையீடு
செய்கையில் சாந்திபுரத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப் பகுதியில் ஏற்கனவே அப்பகுதி மக்களுக்கு காணிகள்
பகிர்ந்தளிக்கப்பட்டபோது ஒரிரு காணிகள் அப் பகுதி கிராமத்தின் நலன் கருதி
பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

இவ் பகுதியில் காணிகள் பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டபோது ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 8 பேச் காணிகளே வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்பொழுது பொது தேவைகளுக்காக ஒதுக்கப்படடிருந்த இவ் காணிகளை இப் பகுதி சங்கங்ளுக்கோக அல்லது பொது அமைப்புகளுக்கோ தெரியப்படுத்தாது வழங்கப்பட்டு வருவதாக இவ் கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையீடு செய்துள்ளனர்.
அத்துடன் இப் பகுதியில் இன்னும் பலர் காணிகள் இன்றி இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க மன்னார் பிரதேச செயலாளரினால் பொது தேவைகளுக்கு
ஒதுக்கப்பட்ட காணியை வேற்று பகுதி நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது
எனவும் முறையீடு செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் நகர் பிரதேச செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தங்கள் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணியில் பிரத்தியேக 02 நபர்களுக்கு தலா 15 பேச் வீதம் தங்களால் வழங்கப்பட்டுள்ளன என தனது கவனத்துக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு வருடத்துக்கு முன்பு இப் பகுதியில் காணியை மக்களுக்கு
பகிர்ந்தளிக்கும்படி என்னால் ஆலோசனை வழங்கப்பட்டபோது இவ் மக்களின் பொதுத் தேவைகளுக்காக விடப்பட்டுள்ள காணி என அன்றைய பிரதேச செயலாளரால் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டது என்பதும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.

அகவே அக் கிராமத்தின் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்ட காணிகளை தனியாருக்கு வழங்காது பொதுத் தேவைக்கு மட்டும் வழங்கும்படி வேண்டி நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் சாந்திபுரத்தில் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்க வேண்டாம்.சாள்ஸ்MP Reviewed by Author on August 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.