அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதல் விமானி இராவணன்தான்! பெருமை கூறும் இலங்கை -


இராவணன் தான் என உலகின் முதல் விமானி என இலங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில். இராவணன் பழங்காலத்தில் பயன்படுத்திய முறைகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இலங்கை விமானப் போக்குவரத்து துறை துணை தலைவர் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானப்போக்குவரத்து நிபுணர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியலாளர்கள் கலந்து கொண்ட மாநாடு கட்டுநாயக்கவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தி வானில் பறப்பதற்கு இராவணன் தான் முன்னோடி என்பதை நீருபிக்க தங்களிடம் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றது.

அரசன் இராவணன் ஒரு மிகப்பெரிய மேதை, அவர் தான் வானில் பறந்த முதல் நபர், அவர் ஒரு விமானி, இது புராணக் கதையல்ல, உண்மைச் சம்பவம்.
இதற்கு விரிவான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றது. ஆகையினால் அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் அந்த உண்மையை நிரூபிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சமீப காலமாக இலங்கையில் பண்டைய மன்னர் இராவணனை குறித்த புதிய ஆர்வம் நிலவி வருகிறது. அண்மையில், இலங்கை தனது முதல் விண்வெளி பயணத்தில் இராவணன் என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.

இலங்கையின் பெரும்பாலான மக்கள் இராவணன் ஒரு கருணைமிக்க அரசன் எனவும் ஒரு அறிஞர் என்றும் கருதுகின்றனர். சில இந்திய வேதங்கள் கூட அவரை மகா பிராமணர் அல்லது பெரிய அறிஞர் எனவும் கூறுவதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
உலகின் முதல் விமானி இராவணன்தான்! பெருமை கூறும் இலங்கை - Reviewed by Author on August 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.