அண்மைய செய்திகள்

recent
-

தினமும் நிலகடலை சாப்பிடுவதனால் நீண்ட காலம் நோய்களின்றி வாழலாமா? ஆய்வில் வெளிவந்த தகவல்


கடலை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதில் மற்ற உணவு பொருட்களை போன்றே நிலக்கடலையிலும் பல சத்துக்கள் உள்ளன எனவும், தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக்கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு கிட்டத்தட்ட 1½ லட்சம் மக்களிடம் நடத்தப்பட்டது.
தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.
அதுமட்டுமின்றி இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து அது நம்மை காத்துக் கொள்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது.


தினமும் 5 முதல் 10 கடலையே மிகச்சிறந்த அளவு அதாவது 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
கடலை இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், ரத்த நாளங்களில் ஏற்பட கூடிய நோய்களுக்கு மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது எனவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி சுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவை வரவிடாமல் கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தடுக்கிறது.

தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் பல ஆராய்ச்சியில் கூறுவது படி, கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது என கூறப்படுகின்றது.

தினமும் நிலகடலை சாப்பிடுவதனால் நீண்ட காலம் நோய்களின்றி வாழலாமா? ஆய்வில் வெளிவந்த தகவல் Reviewed by Author on August 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.