அண்மைய செய்திகள்

recent
-

எமது இனம் உரிமைப்போராட்டங்களிலே முழு பலத்தையும் சக்தியையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்--குரு முதல்வர் A.விக்டர் சோசை அடிகளார்.

காணாமல் ஆக்கப்படோருக்கு முடிவு வேண்டும். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றாவது சொல்லுங்கள் என்று தான் நாங்கள் கேட்கின்றோம்.அவர்களை ஒரு கனமாவது நாங்கள் பார்க்க வேண்டும்.
அவர்கள் இருக்கின்றார்களா? என்பது தான் எங்கள் கேள்வி. எங்களுக்கு எத்தனை வசதிகளை அவர்கள் செய்து தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை.என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான விசேட நிகழ்வானது மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று இவள்ளிக்கிழமை  இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே நாங்கள் எங்கள் உறவுகளை தேடுகின்றோம் .

ஒரு சில நிகழ்வுகளை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 2009ஆம் 2010 ஆண்டுகளில் எனது முன்னை நாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகையின் நல்ல முயற்சிகளையும் அந்த நேரத்தில பல மக்கள் எங்கள் கண் முன்னால் நாங்கள் தான் எமது உறவுகளை கொடுத்தோம் என அழுது மன்றாடினார்கள்.

 எமது மாவட்டத்தில் இவர்களை யார் கொண்டு சென்றார்கள் இவர்களுக்கு யார் பொறுப்பு என எல்லாருக்கும் தெரியும்.

இன்று வரை நாம் தேடுகின்றோம் அது மட்டும் அல்ல பலர் பல இடங்களுக்கு சென்று அங்கு இருக்கின்றார்கள் இங்கு இருக்கின்றார்கள் என்று கூறி எமது மக்களை பல்வேறு கோணங்களில் திசை திருப்பி சென்றுள்ளனர்.

ஆனால் எதற்கும் பதில் வரவில்லை. ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகையின் காலத்தில் அவர் இவ் பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் விடாப் பிடியாக இருந்தார்.

காணாமல் ஆக்கப்படோருக்கு முடிவு வேண்டும். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றாவது சொல்லுங்கள் என்று தான் நாங்கள் கேட்கின்றோம். அவர்களை ஒரு கனமாவது நாங்கள் பார்க்க வேண்டும்.

 அவர்கள் இருக்கின்றார்களா? என்பது தான் எங்கள் கேள்வி. எங்களுக்கு எத்தனை வசதிகலை அவர்கள் செய்து தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

 இந்த 10 வருடங்களில் அவர்கள் பல்வேறு ஆணைக்குழுக்களை ஏற்படுத்தினார்கள.ஆனால் எந்த ஆணைக்குழுவும் எங்களுக்கு முழுமையான பதிலை வழங்கவில்லை.

பல ஆணக்குழு முன் நாங்கள் முன்னிலை ஆகி எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஐ.நா வரை தமிழர்களுடைய மனசாட்சி தட்டியுள்ளது.ஆனால் இன்னும் அது கேட்கப்படவில்லை. வருகின்ற செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு உள்ளது.

 அங்கே நம் தமிழர்களின் குரல் கேட்கும.ஆனால் நிறைய கதைப்பார்கள்.

 அரசாங்கத்திடம் நிறைய கதைப்பதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கைவிடுப்பதாக கேள்விகள் கேட்பதாக தெரிவிக்கப்படும்.
 ஆனால் அதற்கு உருப்படியான பதில்களை தருவார்களா? என்பது உலக மனசாட்சியை நாம் தட்டிக் கொண்டே இருப்பதில் தான் உள்ளது.

எனவே எமது பிள்ளைகள் எமது உறவினர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்ற தீர்வை சொல்லும் வரை கேட்டுக் கெண்டே இருப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.








எமது இனம் உரிமைப்போராட்டங்களிலே முழு பலத்தையும் சக்தியையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்--குரு முதல்வர் A.விக்டர் சோசை அடிகளார். Reviewed by Author on August 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.