அண்மைய செய்திகள்

recent
-

லீக்கின் சட்டதிட்டங்களை மீறி NEPL போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கே தடைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது- மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்-படம்


தற்போது இடம் பெற்று வரும் NEPL  போட்டி தொடர்பாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

விசேட விதமாக NEPL   போட்டி சம்பந்தமாக தெளிவான விளக்கத்தை அளிக்க விரும்புகின்றேம்.கடந்த வருடம் இந்த போட்டியை உருவாக்கியதற்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் மன்னார் மாவட்த்தை சேர்ந்தவர்கள்.

 கடநத் வருடம் உரிமையாளர்களுக்கும், வீரர்களின் நலனுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அங்கே நடைமுறைப்படுத்த வில்லை.
 கணக்குளும் சீராக காட்டப்படவில்லை.

ஆனால் அணி ஒன்றிற்கு 6 இலட்சம் பெறப்பட்ட போதிலும் அதற்கு தகுந்த செலவு விபரம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையிலும் இந்த வருடம் நடைபெற இருந்த போட்டிக்கு முன்பாக பல கேள்விகள் மன்னார் FC  உரிமையாளரால் கேட்கப்பட்டும் அவருக்கு எந்த பதில்களும் வழங்கப்படவில்லை என்பதோடு NEPL  நிர்வாகமானது மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்குடனும் எந்தவித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த வருடம் மன்னார் லீக்கை நம்பி 38 இலட்சத்திற்கும் மேலதிகமாக செலவு செய்த சாதாரண தொழில் புரிவோர் எமது உதைப்பந்தாட்டத்தையும் எமது வீரர்களையும் வளர்க்க வேண்டும் என்று செலவு செய்தார்கள்.

 இந்த வருடமும் அவர்கள் செலவு செய்ய தயாராகவே இருந்தார்கள்.

முடிவு வரும் வரை காத்திருந்தார்கள. ஆனால் அவர்களுக்கு வந்த முடிவு உரிமம் ரத்து செய்யப்ட்டதாகவே இருந்தது.

 எனவே இதன் அடிப்படையில் உதைப்பந்தாட்டத்தில் பிரபல்யமான மன்னார் மாவட்டத்திற்கே ஏற்பட்ட இந்த நிலைமைக்கு எதிராக கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டார்கள்.

 நேர்மையாகவும் கண்ணியமாகவும் கட்டுக்கோப்புடனும் ஒழுக்கத்துடனும் பக்கச்சார்பு இன்றியும் மன்னார் லீக் நிர்வாகத்தை நாம் நடாத்திவருகின்றோம்.
 எமது உதைப்பந்தாட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்ற நோக்கோடு NEPL நிர்வாகம் செயற்பட்டிருக்கின்றது.
 எனவே இந்த வருடNEPL  போட்டியில்  மன்னார் FC உரிமையாளரின் கேள்விகளுக்கு ஒழுங்கான முடிவு கிடைக்கும் வரை மன்னார் மாவட்ட வீரர்கள் போட்டிகளில்  பங்குபற்றவேண்டாம் என அனைத்து கழகங்களுக்கும் அறிவித்திருந்தோம். இதில் 95 வீதமான கழகங்கங்கள்  லீக்கின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டிருந்தனர் .

 ஒரு சில கழகங்களின் வீரர்கள் மாத்திரம் சில நபர்களின் துண்டுதல்களினாலும் ஆசை வார்த்தைகளாலும் லீக்கின் சட்டதிட்டங்களை மீறி போட்டிகளில் பங்குபற்றினார்கள்.

அவ்வாறானவர்களுக்கே லீக்கின் யாப்பு விதிகளுக்கமைய தடைக்கடிதம் அனுப்பப்பட்டது.

 இதுவே லீக்கின் நடைமுறையாகும். லீக்கின சட்டதிட்டத்தை மதித்தும்  மன்னார் FC உரிமையாளர்களின் நியாயத்தை மதித்தும், மன்னார் மக்களின் தியாகத்தை மதித்தும் போட்டியில்  வீரர்களை அனுமதிக்காத கழகங்களின் தலைவர், செயளாளர்,நிர்வாகத்தினர் மற்றும் போட்டிகளில் பங்குபற்றாத வீரர்கள் அனைவருக்கும் எமது மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் சார்பாக மனமார்ந்த கௌரவத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லீக்கின் சட்டதிட்டங்களை மீறி NEPL போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கே தடைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது- மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்-படம் Reviewed by Author on August 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.