அண்மைய செய்திகள்

recent
-

சாந்தி எம்பியின் காணி அபகரிப்பு விவகாரம் கூட்டமைப்பால் விசாரனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


சாந்தி எம்பியின் காணி அபகரிப்பு விவகாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பால் விசாரனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட சிவமோகன் எம்பி சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளார்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களால் கடந்த 2015ம் ஆண்டு மாந்தை கிழ்க்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நீர்பாசனத் தினைக்களத்திற்கு சொந்தமான காணியை சாந்தி எம்பியின் மகனின் பெயரில் குத்தகைக்கு கோரப்பட்து ஆனால் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அது நிராகரிக்கப்பட்டது.

அந்த காலப்பகுதியில் வடமாகான சபையின் உப தவிசாளராக இருந்த அன்ரனி ஜெயநாதன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு காணிகள் பற்றாக்குறையாக உள்ளதால் பெருந்தொகை காணிகளை தனி ஒருவருக்கு வழங்குவதில்லை என்றும் நிராகரித்திருந்தார் இந்த காணிஅபகரிப்பு சம்பந்தமாக அண்மையில் இலங்கை சபாநாயகர் மட்டத்திற்கு இந்த விடயம் சென்றதால் இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு சபாநாயகரால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது அதற்கமைவாக முல்லை அரசாங்க அதிபர் விசாரணையை தொடங்கி இருந்தார் அண்மையில் ஒரு ஊடக சந்திப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்களிடம் சாந்தி எம்பியின் காணி அபகரிப்பு விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சில உண்மை விடயங்களை போட்டுடைத்தார்.

இது சம்பந்தமாக தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் இன்றைய கூட்டத்தில் சிவமோகன் எம்பி தனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாக சாந்தி எம்பி கூறினார் இந்த விவாதத்தின் போது காணி பிடிப்பு விடயத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராசா வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சித்தார்த்தன் எம் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்,
சாந்தி எம்பியின் காணி அபகரிப்பு விவகாரம் கூட்டமைப்பால் விசாரனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. Reviewed by NEWMANNAR on August 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.