அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய தமிழச்சி... முதலிடம் பிடித்து அசத்தல்: குவியும் பாராட்டு -


இந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். இவருக்கு பொன்மணி என்ற மகள் உள்ளார்.
பொன்மணி அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார்.
இதில் 1200-க்கு 1,062 மதிப்பெண்கள் பெற்ற இவர், சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் படித்தார்.

அதன் பின் முதுநிலை பட்டத்திற்கான தேர்வை எழுதினார்.
இந்நிலையில் இந்திய மருத்துவக் கல்விக்காக நடைபெற்ற நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் முதலிடம் பெற்று சாதித்து காட்டியுள்ளார்.
இது குறித்து பொன்மணி கூறுகையில், எம்பிபிஎஸ் கனவில் தான் படித்தேன். ஆனால், சித்தாதான் கிடைத்தது. இருப்பினும் இதை விருப்பத்தோடு படித்தேன். அதன் பின் இந்திய மருத்துவக் கல்வியின் (ஆயுஸ்) முதுநிலை பிரிவுக்கு நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வை எழுதினேன்.

இதற்கான முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 400-க்கு 377 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளேன், இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, சென்னை தாம்பரத்தில் இருக்கும் தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேல்படிப்பு படிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

சாதாரண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய தமிழச்சி... முதலிடம் பிடித்து அசத்தல்: குவியும் பாராட்டு - Reviewed by Author on August 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.