அண்மைய செய்திகள்

recent
-

'வடக்கின்_தங்கக்குரல்' விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு....


'வடக்கின்_தங்கக்குரல்' – விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு

விண்ணப்ப முடிவுத்திகதி செப்டம்பர் 30,2019

இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வட மாகாண இளைஞர் யுவதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கின் தங்கக்குரல் நிகழ்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் தங்கக்குரல் 2019 இற்கான தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் வடமாகாண இளைஞர் யுவதிகளை இசைத்துறையில் ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரல் தேர்வில் 15 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் பங்குபற்றலாம்.

சாஸ்திரீய சங்கீதம், மெல்லிசைப்பாடல், கிராமியப்பாடல்களை உள்ளடக்கிய தமிழர் பண்பாட்டிற்கு அமைவானதாக நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆளுநர் செயலகம் மற்றும் np.gov.lk என்ற வடமாகாண சபையின் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவத்தினை 'வடக்கின் தங்கக்குரல்' வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் : 021 221 9375 , தொலைநகல் இலக்கம்: 021 221 9374 மற்றும் pronpgovernor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளமுடியும்.

‘Golden Voice of North’ – A Musical Contest – Age limit increased to 30

Closing date is 30th September 2019

At the request of the youths of the Northern Province who wish to achieve in the field of music, the age limit of the applicant applying for the ‘Golden Voice of North’ has been increased to 30.

Under the direction of Governor of Northern Province Dr. Suren Raghavan, ‘Golden Voice of North 2019’ – A musical contest is to be conducted by Governor’s Secretariat along with Provincial Ministry of Education and Cultural Affairs.

This contest is organized as per the conceptualization of Governor of Northern Province to encourage the youths who aspire to achieve in the field of music. Youths who are between15 to 30 years old can participate in this contest.

The competition will be held based Tamil culture comprising classical music, melody and folk songs. Those who are interested in participating in this competition are requested to send their applications before September 30, 2019. Application forms can be obtained from the Governor’s Secretariat and the Northern Provincial Council website (https://np.gov.lk/).

Duly filled applications should be sent to “Golden Voice of North”, Governor’s Secretariat, Northern Province, Chundikuli, Jaffna. For further details contact the telephone number: 021 221 9375, Fax No: 021 221 9374 and email at pronpgovernor@gmail.com.

'வடக்கின்_தங்கக்குரல்' விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு.... Reviewed by Author on September 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.