அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை பிரிவில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கியது யார்??? ....நி.நகுசீன் கேள்வி.படங்கள்

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட சில இடங்களில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.எனினும் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி குறித்த தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார்.

 -மன்னார் நகர சபையின் 19 ஆவது அமர்வு  இன்று திங்கட்கிழமை 23/09/2019 காலை 10.30 மணியளவில் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

முதலில் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் மற்றும் போராளிகளுக்கும்,உயிர் நித்த மக்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைர்தொடர்ந்து சபையில் உரை நிகழ்த்துகையிலேயே மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,,,,

மன்னார் பள்ளிமுனை பகுதியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இவ்விடையம் தொடர்பாக நான் உடனடியாக மன்னார் நகர சபையின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.   

கோபுரம் அமைக்கவுள்ள காணியின் உரிமையாளர் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.எனினும் மன்னார் நகர சபையினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த கோபுரம் அமைக்கும் பணிகள் மன்னார் நகர சபையினால் நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பும் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றமையினால் நன்மையா? தீமையா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

5 ஜீ தொலைத்தொடர்பு அழைவரிசையினால் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 அதன் கதிர் வீச்சினால் சிறுவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் உற்பட அனைவரும் பல வகையான நோய் தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அமைக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரம் 5 ஜீ ஆ அல்லது 4 ஜீ ஆ  என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.அது தொடர்பான விளக்கமும் இல்லை.

மன்னார் நகர சபை தலைவர் கூறியுள்ளார் எம்மிடம் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளவில்லை என்று.நகர சபையின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் அவர்கள் எப்படி இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க முடியும்?.குறித்த கோபுரத்தை அமைப்தினால் நன்மை என்றால் நாங்கள் நாங்கள் ஆதரவு வழங்குவோம்.எதிர்காலத்தில் தீமை என்றால் நகர சபை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

புத்தி ஜீவிகளின் கருத்தின் படி 5 ஜீ அழைவரிசையானது  நீண்ட கால விசக்கொள்ளி.இதனை தடுப்பதன் மூலம் எதிர் காலத்தில் எமது சந்ததிகளை பாதுகாக்க முடியும். எனவே நகர சபையின் அனுமதி இல்லாமல் அவர்கள் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

உரிய நடவடிக்கைகளை நகர சபை மேற்கொள்ள வேண்டும்.4 ஜீ என்ற பெயரில் 5 ஜீ கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது.அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இதன் போது மேலும் உரையாற்றிய மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.சொ.ஜாட்சன்,,,

பள்ளிமுனையில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுகின்றமைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதோடு, என்னிடம் முறையிட்டுள்ளனர்.

5 ஜீ தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.அதன் கதிர் வீச்சினால் பல்வேறு நோய்த்தாக்கங்கள் ஏற்படும்.குறித்த 5 ஜீ கோபுரத்தின் உயரத்தில் கமரா ஒன்றும் பொறுத்தப்படும்.எனவே பள்ளிமுனையில் அமைக்கப்படவுள்ள குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்திற்கான அனுமதி ஆவணங்கள் எவையும் இல்லை.எனவே குறித்த தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பது தொடர்பில் நகர சபை உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

-இதே வேளை மன்னார் மாவட்டத்திற்கு என தீ அணைப்பு வாகனம் இல்லாமையினால் பல்வேறு தீ விபத்துச் சம்பவங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார்.

-மன்னார் நகர சபைக்கு மாத்திரம் இன்றி மன்னார் மாவட்டத்திற்கு தீ அணைப்பு வாகனம் தேவை.கடந்த சில தினங்களுக்கு முன் உப்புக்குளம் பகுதியில் ஒரு ஹாட்வெயார் தீயில் எரிந்துள்ளது.

-தீயை கட்டுப்படுத்த பல்வேறு கஸ்டங்களை மக்கள் எதிர்நோக்கினர்.எனவே மன்னார் மாவட்டத்திற்கு ஒரு தீ அணைப்பு வாகனத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் பிரேரணையை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் நகர சபை பிரிவில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கியது யார்??? ....நி.நகுசீன் கேள்வி.படங்கள் Reviewed by Author on September 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.