அண்மைய செய்திகள்

recent
-

உலகின் ஏழு அதிசயங்களை காண 7 நாட்களில் 30,000 மைல்கள் விமானத்தில் பறந்த பிரித்தானிய இளைஞர்:



பயணங்கள் தொடர்பில் அதிக ஈடுபாடு கொண்ட பிரித்தானிய இளைஞர் ஒருவர் வெறும் 7 நாட்களில் உலகின் ஏழு அதிசயங்களையும் கண்டு திரும்பியுள்ளார்.
பிரித்தானியரான 27 வயது சைமன் வில்சன் வெறும் 6 நாட்கள் மற்றும் 9 மணி நேரத்தில் சுமார் 30,000 மைல்கள் விமானத்தில் பறந்துள்ளார்.
இந்த 6 நாட்களில் இருமுறை மட்டுமே அவர் ஹொட்டல் அறைகளில் படுத்து ஓய்வெடுத்துள்ளார். எஞ்சிய வேளைகள் அனைத்தும் விமானத்திலும், விமான நிலையங்களிலும், வாடகை டாக்ஸிகளிலும் படுத்து ஓய்வெடுத்துள்ளார்.
அவர் எடுத்துச் சென்ற பையில் சில உள்ளாடைகளும், 2 டி ஷர்ட்டுகள், உள்ளிட்ட சில ஆடைகளும் மட்டுமே இருந்துள்ளது.
அத்துடன் அவர் கூடவே கொண்டு செல்லும் கமெராவும் அதற்கு தேவையான கருவிகளும் இருந்துள்ளது.
மட்டுமின்றி இந்த ஆறு நாட்களில் அவர் விமானத்தில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

ஞாயிறன்று காலை உள்ளூர் நேரப்படி 4.45 மணிக்கு மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அவர் ரோமைக்கு சென்று அங்குள்ள கொலோசியம் பார்வையிட்டுள்ளார்.
அங்கே 2 மணி நேரம் செலவிட்ட சைமன், அங்கிருந்து நேரே எகிப்து பறந்துள்ளார். அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் 5 மணி ஓய்வெடுத்துக் கொண்ட அவர் டாக்ஸி ஒன்றை அமர்த்திக்கொண்டு பிரமிடுகளை பார்வையிட சென்றுள்ளார்.
நான்காவது நாள் இந்தியாவுக்கு புறப்பட்ட சைமன் அதற்காக இரண்டு விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் 4 மணி நேர டாக்ஸி பயணம் மேற்கொண்டு தாஜ்மஹால் பார்வையிட சென்றுள்ளார்.
ஒருமணி நேரம் அங்கே செலவிட்ட அவர், நேரே சீனாவுக்கு பறந்துள்ளார். ஆறாவது நாள் மெக்ஸிக்கோ பறந்த அவர், அங்கே மாயன் கோபுரங்களை பார்வையிட்டுள்ளார்.
இறுதியில் பனாமா வழியாக ரியோ டி ஜெனிரோவுக்கு பறந்த சைமன் அங்கே மீட்பர் கிறிஸ்துவின் திரு உருவச்சிலையை பார்வையிட்டுள்ளார்.
சரியான திட்டமிடல் இருந்ததாலையே தம்மால் இந்த பயணம் மேற்கொள்ள முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏழு அதிசயங்களை காண 7 நாட்களில் 30,000 மைல்கள் விமானத்தில் பறந்த பிரித்தானிய இளைஞர்: Reviewed by Author on September 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.