அண்மைய செய்திகள்

recent
-

சிங்களத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது வெறும் அரசியல் தந்திரம்- எஸ்.சிவமோகன்MP படம்)

சிங்கள தேசிய கட்சிகளாகவும் எதிர்க் கட்சிகளாகவும் உதிரிக் கட்சிகளாகவும் இருந்து ஒருவரை ஒருவர் கருத்துக்களினால் தாக்கி வசைபாடிக் கொள்வதும் ஒரு விதமான ஒருவிதமான பேரினவாத இராஜ தந்திர நகர்வுகள்.

இவ்வாறான குழப்ப நிலைகளை காரணம் காட்டி மாறி மாறி  ஆட்சிக்கு வருவார்கள்.  ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வு விடயத்தில் வாய் திறக்காமல் அனைவரும் ஒரே முடிவையே எடுப்பார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.

-அவர் மேலும் இன்று (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,

மைத்திரி பால சிறிசேன    எப்பொழுது நாங்கள் அரசியல் யாப்பினை சமர்ப்பித்தோமோ  அப்பொழுதே தனது கட்சியை இரண்டாகப் பிரித்து  ஒரு பிரிவை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்னும் பொய் பெயரிலும்  உருவாக்கி அதை பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பிற்கு எதிராக இயங்க வைத்து  மற்றைய பிரிவை அரசியல் யாப்பிற்கு ஆதரவு மாதிரி ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து இயங்க வைத்த  ஒரு தந்திரவாதி.

மேலும் அவர் ஒரு உண்மையான  அப்பழுக்கற்ற முறையில் நீதியினை கடைப்பிடித்திருந்தால்  அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கட்டாயமாக இந்த அரசியல் யாப்பு மாற்றத்திற்கு  ஆதரவாக செயற்பட வைப்பதன் மூலம் அதை நிறைவேற்றி இருக்கலாம்.

 மாறாக தமிழ்  தேசிய கூட்டமைப்பு கொண்டு வந்த அரசியல் யாப்பு மாற்றத்தினை உருக்குலைக்கும் வேலையை கன கட்சிதமாக செய்து முடித்தார்.

ஏன் எனில்  இந்த அரசியல் யாப்பு மாற்றம் வெற்றி கண்டால்  தனக்கும் அதில் பங்கு உள்ளது என்று சிங்கள மக்கள் எண்ணி விடக் கூடும்.  அதனால் சிங்கள மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவே இவர்  தனது பரிவாரங்களை வைத்த அரசியல் யாப்பு மாற்றத்தை இல்லாமல் செய்துள்ளார்.

இறுதியாக அதே ஜனாதிபதியின் ஆளனிகள் மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து  சிறிலங்கா சுதந்திர கட்சியினை உருக்குலைத்து விட்டு மொட்டின் பக்கம் தாவி உள்ளார்கள்.

 எனவே  சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்  தலைவராக இருந்த காலத்தில்  அவரது சொந்த கட்சியையே உருக்குலைத்த  பெருமைக்குரியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரா?

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் புரட்சியை ஏற்படுத்தி சட்டத்திற்கு முரனாக செயற்பட்டதன் மூலம்  இந்த நாட்டின்  ஜனாதிபதி என்னும் மதிப்பை இழந்த ஒருவராக நீதிமன்றினால் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தார் என்பது தான் உண்மை.

 ஒட்டு மொத்தத்தில் தமிழர்களின் வாக்குகளினால் தெரிவான மைத்திரி பால சிறிசேன அவர்கள்  தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்துள்ளாரா? என்றால்  அது தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ,இராணுவத்தினரை வைத்து காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு துரோகங்களை மாத்திரமே செய்துள்ளார்.

நல்லாட்சி என்ற பெயரில் வந்தவர் தமிழ் மக்களுக்கு கொடுத்தது கெட்ட ஆட்சியை தான்.  பதவிக்காலம்  முடிந்ததும் சிறு பிள்ளைகளின் சண்டைகளைப் போல்  ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரை  மாற்றி ஒருவர் சட்டையை பிடித்துக் கொள்கிறார்கள்.
இது ஒரு கபட நாடகம் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

ஏனென்றால் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு  தடையாக இருப்பது பாராளுமன்றமும் சில அரசியல் வாதிகளும் எனும் பொருள்படும் விதத்தில் உரையாற்றி இருந்தார். இதுவே நல்ல உதாரணம்.

அவர்கள் யாரேனும் ஜனாதிபதியாக இருந்து விட்டு போங்கள்  மக்களிடம் வாக்கு கேட்டு வருவதற்கு முன்  தமிழ் மக்களின் அனைத்த பிரச்சனைகளுக்குமான தீர்வு என்ன? என்று கூறிவிட்டு தமிழ் பிரதேசங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வரட்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மேலும் தெரிவித்தார்.

சிங்களத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது வெறும் அரசியல் தந்திரம்- எஸ்.சிவமோகன்MP படம்) Reviewed by Author on September 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.