அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் சாதனை பயன முத்திரை வெளியீட்டு நிகழ்வு-முழுமையான படங்கள்

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆண்டு பூர்த்தி யூபிலி நிகழ்வை ஒட்டி பாடசாலையின் சாதனை பயன விசேட தபால் தலை வெளியீட்டு நிகழ்வு மற்றும் சிறுவர் மாணவர் தலைவர்களுக்கான தினமும் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட்FSC  தலைமையில் காலை 8 மணிக்கு இடம் பெற்றது.

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்தியை முன்னிட்டு பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக பல்வேறுபட்ட கலாச்சார மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் 150 ஆண்டு சாதனை பயணத்தின் தேசிய அங்கிகாரத்திற்கு என விசேட தபால் தலையானது இலங்கை தபால் திணைக்கல முத்திரை விநியோக பணிப்பாளர்  மீஹம மற்றும் தபால் திணைக்கல பிரச்சார பிரிவு அதிகாரி  K.K.J.பெரேரா முன்னிலையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர்சோசை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயகல்விபணிப்பாளர் திரு.பிறட்லி அவர்களும் மன்னார் டிலாசால் சபை இயக்குனர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் மற்றும் மன்னார் பிரதம தபால் அதிபர் அந்தோனிப்பிள்ளை சகாயசீலன் உட்பட ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நிர்வக உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டரீதியில் வெளியீட்டு வைக்கப்படும் முதல் தபால் தலை இது என்பது குறிப்பிடதக்கது.
 

















மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் சாதனை பயன முத்திரை வெளியீட்டு நிகழ்வு-முழுமையான படங்கள் Reviewed by Author on September 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.