அண்மைய செய்திகள்

recent
-

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய இளம்பெண்:


பிரித்தானியாவில் புற்றுநோய் தொடர்பில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இளம் பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
நார்தாம்ப்டன்ஷைர் பகுதியில் குடியிருந்து வந்த 23 வயதான டெய்ஸி எல்லிஸ் என்பவரே அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.
இந்த தகவலை அவரது பெற்றோரே சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியவகை புற்றுநோயால் டெய்ஸி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் அதனால் சிறிதளவும் மனம் தளராத டெய்ஸி, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புற்றுநோய் தொடர்பில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

36,000 பின் தொடர்பாளர்களை கொண்ட டெய்ஸி தமது தினசரி வாழ்க்கை தொடர்பிலும் அதில் குறிப்பிட்டு வந்துள்ளார்.
பிரித்தானியாவில் sarcoma எனப்படும் இந்த அரியவகை புற்றுநோய் நாளுக்கு 15 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு இந்த எண்ணிக்கை 5,300 என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த டெய்ஸி, ஞாயிறன்று மிகவும் பலவீனமாக காணப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மரணமடைந்துள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.


புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய இளம்பெண்: Reviewed by Author on September 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.