அண்மைய செய்திகள்

recent
-

உயிழந்த மாணவி---மாணவர் உயிர் ஆபத்துக்களை உணராத கல்வியை கற்பித்து என்ன பயன் !!


எங்களது மாணவர்களை பாதுகாப்போம்

விஞ்ஞான ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டியது தருணம் !!

எச்சரிக்கை காரைதீவில் மரணமடைந்த செல்வி நடேஸ்வராசா அக்சயாவின் மரணம் ஒரு எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளது,

சம்பவம்
தாய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் தாதி. அன்று இரவு நேர வேலை, காலை 5மணிக்கு ரியூசன் என்பதால் 4மணிக்கு குளிக்கப் போகிறாள்.புதிய வீட்டுக்குள் அப்பாவும்,அண்ணாவும்,அம்மம்மாவும் நித்திரை என்பதால் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் பழைய வீட்டுக்குள் இருந்த பாத்றூமில் குளிக்க ஆயத்தமாகிறாள்,குளித்துக்கொண்டிருந்த பிள்ளை  வெளிச்சம் போதவில்லை என்பதால் ஈரக் கையுடனும்  நனைந்த உடலுடனும் போய் ப்ளக்கைப் போடுகிறாள் இரவு முழுவதும் மின்கசிவில் இருந்த ப்ளக் வெடித்துப் பறந்து மின்சாரம் பிள்ளையை தூக்கி எறிகிறது.

பிள்ளை மயக்க நிலையில் கிடக்கிறாள் வயர் முழுவதும் எரிந்து மேலே செல்கிறது அங்கே குப்பையும் கூழமுமாக கிடந்த பொலித்தீன் பைகள்,வயர்கள் எல்லாவற்றிலும் நெருப்புப் பிடித்து உருகி உருகி மயக்க நிலையில் கிடந்த பிள்ளையில் ஒழுகி பிள்ளையை முழுவதுமாக பொசுக்கி விடுகிறது,அரை மணிநேரத்துக்கும் மேலாக வெளியே வராத தங்கையைப் பார்க்க அண்ணன் போகிறான்,அங்க அவன் கண்ட கோலம் தங்கையின் பொசுங்கிய உடல்…

பதில்
வரும் பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை உயர்த்தி
உயர் பெறுபவர்களை எடுக்க வைத்தது நல்லாசிரியர் என்ற பெயரையும் பணத்தைச் சம்பாதித்து விரைந்து கொண்டே இருக்கின்றோம் !!

சிந்திக்க வேண்டியது !!
உயர்தரத்தில் பௌதிகவியல் கற்கை
தொடர்கின்ற மாணவிக்கு
ஈரக் கையுடனும் #நனைந்த உடலுடனும் போய் #ப்ளக்கைப் போடுகிற அறிவை வழங்கியது யார் ??
#இதில் மாணவி ஏன் கவனம் கொள்ளவில்லை !!
தரம் 11 விஞ்ஞானம் பாடத்தில் வீட்டு மின் இணைப்பு தொடர்பாக போதிய அறிவை தரக்கூடிய பாட விதானங்கள் #உள்ளடக்கப்பட்டு இருக்கும் நிலையில் !!
வகுப்பைத் தாண்டி வந்த மாணவிக்கு அனுபவ அறிவு வழங்கப்படாமை !!
யார் செய்த தவறு !!!
1.ஆசிரியர்கள் சரியான கல்வி அறிவு வழங்காமல்

2. அதிகாரிகளின் பரீட்சைக் கொள்கை மையமாகக் கொண்ட கல்வி மேற்பார்வை !

3. சரியான அனுபவ அறிவை வளர்க்க முடியாத பாடவிதான திட்டமிடல் கொள்கை !!

4.மாணவர்களின் அசட்டை இனமான கற்கை நடவடிக்கைகள் !!

5.மாணவர்களை பரிட்சை புள்ளியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பெற்றோரின் வழிகாட்டல் "!!

6.மின்சார சபையினரின் சரியான மேற்பார்வை நடவடிக்கை இல்லாமை !!

தரம் 11 இல்
  • இடர் ஆளி தொழிற்படும் தன்மையை பரிசோதித்தல் !!
  • மின் கசிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு பெறல்!!

தயவுசெய்து
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களுக்கு அனுபவரீதியாக கல்வியை வழங்குவதற்கு இயன்றவரை முயற்ச்சிக்க !!
ஆகக்குறைந்தது உதாரணங்களையாவது
நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு எடுத்துக்காட்டுகளை முன்வைக்க வேண்டும்!

ஆசிரியர் ப.விஜிதரன்
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயம் ..
மாணவியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்



உயிழந்த மாணவி---மாணவர் உயிர் ஆபத்துக்களை உணராத கல்வியை கற்பித்து என்ன பயன் !! Reviewed by Author on September 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.