அண்மைய செய்திகள்

recent
-

சட்டங்களுக்கு மதிப்பளிக்காது செயல்பாடு தொடருமாகில் ஐனநாயகம் அற்ற இராணுவ ஆட்சியாக மாறும் அபாயம்--

இலங்கையில் சட்த்திட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் செயல்பாடானது
தொடருமாகில் ஐனநாயகம் மறைக்கப்பட்டு இராணுவ ஆட்சியாக மாறக்கூடிய நிலைமையும் உருவாகலாம் என மன்னார் மாவட்ட இந்து மகா சபை தலைவரும், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபை செயலாளருமான சி.இராமகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட இந்து மத பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட  ஊடக சந்திப்பில் இவர்  முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடாத்தப்பட்ட சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்

இலங்கை என்பது அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய நாடு. எமது நாட்டு
பாராளுமன்றத்தில் அனைவரும் இனைந்தே சட்டங்களை ஏற்படுத்துகின்றனர்.

இவ் சட்டங்களை அமுல்படுத்துகின்றனர் நீதித் துறையினர். இப்படியிருக்க
அன்மையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடாத்தப்பட்ட
செயல்பாடானது மிகவும் அடாவடித்தனமானது.

இந்த செயல்பாடானது தொடருமாகில் ஐனநாயகம் மறைக்கப்பட்டு இராணுவ ஆட்சியாக மாறக்கூடிய நிலைமையும் உருவாகலாம்.

இந்த நாட்டில் பல்லின மதங்கள்  இருந்தாலும் அனைவரும் நல்லினக்கத்துடன் ஒற்றுமையாகவே வாழத் துடிக்கின்றனர்.

ஆனால் நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடாத்தப்பட்ட செயல்பாடானது மிகவும் பாரதூரமானது.

பொதுவாக இந்து சமயத்தில் பல கட்டுப்பாடுகள் அனுஷ;டானங்கள் செய்யப்பட வேண்டிய கிரிகைகள் வேறுவிதமானது.
இந்து சமய ஆலயங்களுக்குள் இந்து மத குருக்களாக இருந்தாலென்ன வேறு யாராக இருந்தாலும் அவர்களின் உடல்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்வதில்லை. இவ்வாறு இருக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடாத்தப்பட்ட செயலானது பழமை வாயந்த தீர்த்த குளத்தில் வைத்து பௌத்த பிக்குவை தகனம் செய்தது இந்துக்களை கவலைப்படுத்தும் செயலாகவே இருக்கின்றது.

இது இந்த நாட்டில் நல்லினக்கத்தை சீர்குழைக்கும் செயலாகவும் இந்துக்களை
தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகவே இது அமைகின்றது.

ஒரு சமய நிகழ்வு இடம்பெற வேண்டுமானால் அந்த இடத்தில் கனிசமான அவ் மத மக்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது ஒரு பழமைவாய்ந்த இந்து ஆலயம் இருக்க அந்த இடத்தை பலாத்காரமாக கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

பௌத்த பிக்குகள் ஒரு அரச காணியை பெற்று அங்கு அவர்கள் விகாரைகளை
அமைத்திருக்கலாம் இறந்த பிக்குவதை அந்த இடத்தில் தகனம் செய்திருக்கலாம். இதற்கு எந்த தடையும் இருந்திருக்காது.

மாறாக சட்டத்தை மீறி செயல்பட்டது ஒரு அநியாயமான செயல்பாடாக காணப்படுகின்றது. இதனால் இந்த நாட்டில் நல்லினக்கம் சிதரடிக்கப்படுவதுடன் தீய செயலில் ஈடுபடும் மதத்துக்கே கெட்டப் பெயர் ஏற்படுகின்றது.

ஆகவே மதங்களுக்கிடையே இனங்களுக்கிடையே நல்லுரவு  ஏற்பட சட்டத்திட்டங்கள் நீதித்துறை நன்கு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


சட்டங்களுக்கு மதிப்பளிக்காது செயல்பாடு தொடருமாகில் ஐனநாயகம் அற்ற இராணுவ ஆட்சியாக மாறும் அபாயம்-- Reviewed by Author on September 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.