அண்மைய செய்திகள்

recent
-

சூழலியல் பிரசைனைகளால் பாதிக்கப்படும் மீனவர்கள்.....


இலங்கையினுடைய மீன் பிடி வர்த்தக சந்தையில் மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய பகுதிகளில் நீர்கொழும்பு மிகவும் முக்கியமானதாகும்

நீர் கொழும்பு பகுதியில் களப்பு மீன்பிடித்தொழில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும் பிட்டிப்பன்ன பகுதியில் உள்ள சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் களப்பு மீன் பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இவ் களப்பு மீன்பிடி வாழ்வதாரத்தை மையமாக கொண்டு பல உப தொழிகளும் மேற்கொள்ளப்படுகின்றது குறிப்பாக சிறு மீன் விற்பனை தூண்டில் மீன் பிடி மீன் வெட்டும் தொழில் சிறிய பெரிய நடுத்தர மீன் ஏற்றும் மதி போன்ற உப தொழில்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக பிட்டிப்பன்ன களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வு மற்றும் கடல் சேறாதல் முறையற்ற கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் காரணமாக களப்பு மீன் பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுவருகின்றன

கொழும்பு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்படுவரும் துறை முக நகர செயற்திட்டத்திற்காக குறித்த பகுதியில் இருந்து மணல் அகழப்படுவதனால் கடல் ஆழமாவதுடன் சேறு உருவதல் ஏற்படுவதனால் குறித்த கடல் பகுதியில் உள்ள மீன் ரால் இனங்கள் அழிவடைந்து வருகின்றன அதே நேரத்தில் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தினால் அதிகளவிலான பிளாஸ்ரிக்கு குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் கடலுடன் கலந்து குப்பை நிறைந்த கடல் களப்பு பகுதியாக காணப்படுவதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர் அதே நேரத்தில் கலப்பு பகுதியில் காணப்படும் மரங்கள் பற்றைகள்  வெட்டப்பட்டு அவற்றின் கழிவுகளும் களப்பு பகுதியில் போடப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு தரப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூழமும் நேரடியாக சென்று முறையிட்ட போதிலும் சம்மந்த பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என பிட்டிப்பன்ன மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆரம்ப காலங்களில் இறால் மீன் அதிக அளவில் பிடிபடுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள இவ்வாரான சூழலியல் பாதிப்பு காரணமாக மீன் இனக்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி குறைவடந்துள்ளமையால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும் எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு மணல் அகழ்வு மற்றும் கடற்பகுதிகளில் கொண்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாருப்கோரிக்கை விடுத்துள்ளனர்.


சூழலியல் பிரசைனைகளால் பாதிக்கப்படும் மீனவர்கள்..... Reviewed by Author on September 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.