அண்மைய செய்திகள்

recent
-

பட்டத்தாரி கல்வியல் கல்லூரி பயிற்சி இல்லாதவர்களுக்கு எந்த வகுப்பறைகளும் இருக்கக் கூடாது.


பட்டத்தாரி கல்வியல் கல்லூரி பயிற்சி இல்லாதவர்களுக்கு எந்த
வகுப்பறைகளும் இருக்கக் கூடாது என்ற திட்டத்தை கல்வி அமைச்சு
எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் அனுமதியையும் வழங்கியுள்ளோம். ஏனென்றால் பாடசாலையில் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக இவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது என பிரதமா ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு பவள விழா நேற்று வியாழக் கிழமை  12.09.2019 விமரிசையாக கொண்டாடப்பட்டது.

-இவ் பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் கொண்டாடப்பட்ட இவ் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவருடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாட் பதியூதினூம் கலந்து கொண்டார்.

இவ் பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதான அரங்கையும், பாடசாலை வகுப்பறைக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தபின் பொது மக்கள் மத்தியில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்
பல்கலைக்கழகம் சென்றவர்களில் நூற்றுக்கு அதிகமான மாணவர்கள் இவ்
மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு சென்றவர்கள் இங்கு
இருக்கின்றார்கள்.

இந்த எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பகாலத்தில்
முன்னாள் பிரதமராக இருந்த J.R..ஜெயவர்த்தவினால் நிர்மானிக்கப்பட்ட
கட்டிடம் ஒன்று பழமை வாய்ந்து காணப்படுகின்றது.

இவ் பழமை வாய்ந்த கட்டிடத்தை புணரமைத்து தருவதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்ளுகின்றேன்.

இவ் பிரதேசத்தில் பழமை வாய்ந்ததும் பிரசித்த பெற்ற ஒரு பாடசாலையாகவும் இவ் எருக்கலம்பிட்டி பாடசாலை இருப்பதாக நான் அறிந்துள்ளேன்.

ஆகவே இவ் மத்திய மகா வித்தியாலயத்தை பல விதத்திலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது விடயமாக என்னிடம் பலர்
வேண்டியிருந்தனர்.

குறிப்பாக இங்குள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தரும்படி
வேண்டியுள்ளனர். இது விடயமாக நான் அமைச்சர்கள் றிசாட் பதியுதீனுடனும்
கல்வி அமைச்சருடனும் நான் ஆலோசித்து விட்டு இங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன்.

நான் கல்விக்கு அதிக உதவிகளை செய்த ஒரு பிரதமராக  இருப்பதையிட்டு பெருமை அடைகின்றேன். 1978 ஆம் ஆண்டிலிருந்து கல்வித் துறைக்கு பலவிதமான உதவிகளை செய்துள்ளேன்.

இத்துடன் நின்று விடாது எதிர்காலத்திலும் கல்விக்காக பல மில்லியன் ரூபாவை செலவு செய்ய நான் ஆய்த்தமாக இருக்கின்றேன்.

பதின்மூன்று பாடசாலை வாழ்க்கையை வழங்கி நாட்டில் நல்லதொரு அறிவியல் சமூதாயத்தை உருவாக்குவதற்கான எதிர்காலத் திட்டங்களை நான் வைத்துள்ளேன்.

தகவல் தொழில் நுட்பத்தை விருத்தி செய்வதற்காக எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் பட்டத்தாரி கல்வியல் கல்லூரி பயிற்சி
இல்லாதவர்களுக்கு எந்த வகுப்பறைகளும் இருக்கக் கூடாது என்ற திட்டத்தை
கல்வி அமைச்சு எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் அனுமதியையும்
வழங்கியுள்ளோம்.

ஏனென்றால் பாடசாலையில் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற
ஆசிரியர்கள் மூலமாக இவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது.

அன்மையிலுள்ள பாடசாலை மிக சிறந்த பாடசாலை என்ற தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் அகில்வராஐ; காரியவசம் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் கட்டிடங்களை வழங்கி பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் ஒரு அமைச்சராக இருக்கின்றார்.

ஆகவே இந்த நேரத்தில் கல்வி அமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்து
நிற்கின்றேன். கடந்த வாரம் ஒரு விஷேட கல்வி நிறுவனம் விஷேட
சேவையுள்ளவர்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விஷேட தேவையுள்ளவர்களுக்கும் கல்வி அறிவு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இதை செயல்படுத்தியுள்ளோம் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் இந் நாட்டில் 21 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழக பீடங்கள்
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் நூறு மாணவர் விடுதிகளும்
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கல்விக்காக நாங்கள் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளோம். சீ.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச கல்வித் திட்டத்தை தொடர்ந்து மேலும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

றிசாட் அமைச்சர் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல முயற்சிகளை
செய்து வருகின்றார். வீதி அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி பாடசாலை
கட்டிடங்களை உருவாக்குவது போன்ற அபிவிருத்திகளுடன் மன்னார் மாவட்டத்தில்சுற்றுல்லாத் துறையை மேம்படுத்துவதற்கான பல வேலைத் திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.

இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் நாங்கள் அவருக்கு வழங்கி வருகின்றோம் என இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.






பட்டத்தாரி கல்வியல் கல்லூரி பயிற்சி இல்லாதவர்களுக்கு எந்த வகுப்பறைகளும் இருக்கக் கூடாது. Reviewed by Author on September 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.