அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-வீதிகளில் சிலைகள் வளைவுகள் அமைப்பதும் உடைப்பதாலேயே அமைதியின்மை-தேசிய சமாதானப் பேரவை மன்னார் பிரதேச சபை தவிசாளர் சந்திப்பில் தெரிவிப்பு

மன்னார் பகுதியில் வீதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக சிலைகளும்,
சுரூபங்களும் மற்றும் வளைவுகள் அமைப்பதால் அவைகளை உடைப்பதால் ஏற்படும் காரணிகளாலேயே மன்னாரில் மதப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தேசிய சமாதானப் பேரவை, தொடர்பாடலுக்கான பயிற்சி நிலையம் மற்றும் சர்வமதக் குழுக்கள் கொண்ட  குழுவினர் மன்னார் பிரதேச
தவிசாளர் எம்.எஸ்.எம்.முஜாஹீரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

நேற்றைய தினம் திங்கள் கிழமை (09.09.2019) தேசிய சமாதானப் பேரவை,

தொடர்பாடலுக்கான பயிற்சி நிலையம் மற்றும் சர்வமதக்  குழுவினர் மன்னார் பிரதேச சபை தவிசாளர்எம்.எஸ்.எம்.முஜாஹீரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து மன்னார் பிரதேச சபை பகுதிக்குள் மதங்கள் மற்றும் அரசியல் பிரச்சகைள் ஏற்படாதிருக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  ஆலோசனைகள் இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் கருத்துக்கள் பரிமாறப்படுகையில் சமயங்களுக்கிடையே முதலில் பிரச்சனைகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஏட்டிக்குப் போட்டியாக வீதிகளில் சரூபங்கள் சிலைகள் வைப்பதும் வீதிகளில் வளைவு அமைப்பதும் இவைகளை உடைப்பதும் இவ்வாறு செயல்பாட்டாலேயே மதங்களுக்கிடையே பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

ஆகவே வீதிகளில் சிலை, சுரூபங்கள் வைப்பது மற்றும் வளைவு அமைப்பதற்கு பிரதேச சபை எவருக்கும் அனுமதி வழங்குவதை தடை செய்யுமாகில் இவ்வாறான பிரச்சனைகள் தோன்றுவது நிறுத்தப்படலாம் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

பிரதேச சபை அனுமதியின்றி இவைகள் நிர்மானிக்க கூடாது என சட்டம்
இருக்கின்றபோதும் பல இடங்களில் இவ் சட்டத்தை மீறி செயல்படுகின்றனர்.
இவற்றை தடை செய்ய முற்படும்போது வேறு பல பிரச்சனைகள் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பொதுவான பிரச்சினைகளான மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகாளில்  வெளியாட்கள் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்து கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான மணல்
அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆனால் இங்கு மீன் வளர்ப்பு ஒன்றும் இடம்பெறவில்லை. மேலிட செல்வாக்கை வைத்து இது இடம்பெற்று வருகின்றது. மன்னார் தீவு கடலைவிட இரண்டு அடி பதிவாக காணப்படுகின்றது.

ஆனால் கடற்கரையோரமாக மணல் திட்டிகள் காணப்படுவதால் மன்னார் தீவு
காப்பற்றப்பட்டு வருகின்றது. ஆனால் தற்பொழுது தீவுக்குள் சட்டபூர்வமற்ற
முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதால் விரைவில் மன்னார் தீவு அழியும் நோக்கம் இருப்பதாகவும் சில பொது பிரச்சினைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.







மன்னார்-வீதிகளில் சிலைகள் வளைவுகள் அமைப்பதும் உடைப்பதாலேயே அமைதியின்மை-தேசிய சமாதானப் பேரவை மன்னார் பிரதேச சபை தவிசாளர் சந்திப்பில் தெரிவிப்பு Reviewed by Author on September 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.