அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் கூட்டமைப்பிற்குள் பிளவு! தடுமாறும் சம்பந்தன் -


கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு சஜித் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆர்.சம்பந்தனின் வீட்டில் இடம் பெற்றது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து

வேட்பாளர்களையும் சந்தித்து பேசுவதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் காலை 10 மணியளவில் தொடங்கிய கூட்டம் மதியம் 1 மணியைக் கடந்தும் நீடித்தது.

கூட்டத்தின் தொடக்கத்தில், அமைச்சர் சஜித் பிரேமதாசவை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசிய விடயங்களை இரா.சம்பந்தன் தெளிவுப்படுத்தினார்.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றிய தெளிவான திட்டங்கள் அவரிடமிருக்கவில்லையென இரா.சம்பந்தன் உறுதியாக குறிப்பிட்டார்.
இதன்பின்னர், ஜனாதிபதி தேர்தல் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.
இறுதியில், எந்த வேட்பாளரையும் ஆதரிப்பதாக உடனடியாக அறிவிப்பதில்லையென்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்க விரும்பும் அனைத்து வேட்பாளர்களுடனும் பேசுவதென்றும் ஒருமித்த முடிவு எடுக்கப் பட்டது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் பொருத்தமான தீர்வு திட்டத்தை முன்வைக்கும் வேட்பாளரை ஆதரிப்பதென முடிவாகியது.
கோட்டாபய ராஜபக்ச இரண்டு முறை எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசியதாகவும், இரா.சம்பந்தனை சந்திக்க விரும்பி தகவல் அனுப்பியதாகவும் எம்.பிக்களிற்கு தெளிவுபடுத்தப்பட்டது.
விரைவில் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் கோட்டாபயவுடன் பேச்சு நடத்துவார் என்றும், அதன் பின்னரே, இரா.சம்பந்தன் பேச்சு நடத்துவார் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு ரணில் விக்கரமசிங்கவை கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திக்கவுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவே, இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

ரணிலுடனான சந்திப்பை தவிர்க்க வேண்டுமென சில எம்.பிக்கள் தெரிவித்தனர். கல்முனை விவகாரத்தில் வாக்குறுதியை ரணில் நிறைவேற்றவில்லையென குறிப்பிட்டு மாவை சேனாதிராசா, கோடீஸ்வரன் ஆகியோர் இதை வலியுறுத்தினர்.
ரிசாத் பதியுதீனுடன் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படும் பிரதமர் ரணிலை எதற்காக சந்திக்க வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பினார்.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் பேசுவதே முறையென ஏனைய எம்.பிக்கள் அனைவரும் ஒருமித்த முடிவு எடுத்தனர்.
கலந்தரையாடலில் திட்டமிட்டதன் அடிப்படையில் மாலை 3 மணிக்கு சந்திப்பு நடைபெறும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பிரதமர் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் அவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கருத்திற்கு எதிர்கருத்தடனும் இருப்பது இன்றைய கூட்டத்தில் தெளிவாக தென்பட்டதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தபால் மூல வாக்களிப்பின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியானது.

ஆனால் தபால் மூல வாக்களிப்பில் மக்கள் மைத்திரிபாலவை வடக்கு - கிழக்கில் முழுமையாக ஆதரித்தனர் எனவே மக்களின் மன நிலை அறிந்த கூட்டமைப்பு முடிவு எடுக்க தவறினால் எதிர்கால அரசியலில் பாரிய பின்னடைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டு தேசியக் கட்சிகள் எமது பகுதியில் கால் ஊன்ற வாய்ப்பாக அமையும் என மேலும் குறிப்பிட்டார்.
இரு வேறு கருத்து நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஆரம்ப பிளவையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பந்தனின் முடிவு எடுக்கும் திறனில் சற்று தாமதத்தையும் ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் கூட்டமைப்பிற்குள் பிளவு! தடுமாறும் சம்பந்தன் - Reviewed by Author on September 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.