அண்மைய செய்திகள்

recent
-

இன்றுடன் தகரவிழா காணும் உங்கள் நியூ மன்னார் இணையம்( 2009-2019)

வணக்கம் உறவுகளே....

எமது நியூமன்னார் இணையம்(Newmannar.lk ) இதே நாள் 2009 ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(25-10-2019)
பத்தாண்டுகள்  பூர்த்தி அடைந்து 11வது ஆண்டில் காலடி வைப்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

எமது இணையம் மூலம் மக்கள் மன்னார் தகவல்களையும்,செய்திகளையும் உடனுக்குடன் அறிய எமது இணையம் பங்காற்றி வருகின்றது.

நாம் இந்த இணையத்தை ஆரம்பித்ததன் நோக்கம் உலகிலுள்ள தமிழ் பேசும் மக்கள் எமது மாவட்டத்தின் நிலைமைகளையும்,செய்திகளையும் அறிந்துகொள்வதற்காகவும் மேலும் மன்னார் மாவட்டத்துக்கென ஒருசெய்தி இணையமும் இல்லாத காரணத்தாலும் எமது மாவட்டம் பற்றிய தகவல்கள் மறைக்கப்படுவதாலும் அதை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துக்காவும் உதயமாகியது எம் இணையம்.  

மன்னார் மாவட்டத்தில் நடை பெறும் சகல நிகழ்வுகளையும் எங்களால் இயன்ற அளவு தெரியப்படுத்துகின்றோம் . மேலும் இணையத்தின் பணிகள் மன்னார் மக்களிற்காக மட்டுமின்றி அனைத்து தமிழ்பேசும் மக்களிற்காக இன்னும் சிறந்த விருத்தியுடன் உங்களை வந்தடையும் என்பதை இவ்விடத்தில் அறியப்படுத்துகின்றோம்.
நியூ மன்னார் இணையச்செய்திகள் எந்த வகையிலும் பொய்யாகவோ,திரிவுபடுத்தியோ மக்களுக்கு தெரிவிக்கவிலை நாம் வெளியிடும் செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்தியே வெளியிடுகின்றோம். உண்மைக்கு மாறான அல்லது எம்மால் உறித்திப்படுத்த முடியாத செய்தியை நாம் வெளியிட விரும்பவில்லை, இதனால் தான் நாம் சில செய்திகளை தவிர்த்து வந்துள்ளோம் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

இது உங்களால் சாத்தியமாயிற்று எமது உறவுகள் அனைவனருக்கும் எமது நியூ மன்னார்  இணைய குழுமத்தின் சார்பில்
நன்றிகள்

-முத்து விஜிதன்-
இயக்குநர்
 நியூ மன்னார் இணையம்-
https://www.facebook.com/NewMannarTV

இன்றுடன் தகரவிழா காணும் உங்கள் நியூ மன்னார் இணையம்( 2009-2019) Reviewed by Admin on October 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.