அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த இலங்கை மாணவருக்கு வெற்றி!


தொடுக்கப்பட்ட அபகீர்த்தி வழக்கில் குறிப்பிட்ட மாணவனுடன் செய்துகொண்ட சமரசத்தின் அடிப்படையில் வழக்கு முடிவுக்கு வந்துள்ளள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் Opera மண்டபம் உட்பட முக்கிய இடங்களுக்கும் குண்டு வைத்து தாக்குதல் நடத்தவிருந்தார் என்றும் அரசியல்வாதிகளை கொலை செய்யத்திட்டமிட்டிருந்தார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கை மாணவன் Mohamed Nizamdeen கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கு நடைபெற்றபோது அவை அனைத்தும் பின்னர் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டது.
இவரை போலிச்சதியொன்றின் மூலம் மாட்டிவிட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், Mohamed Nizamdeen தொடர்பிலான செய்திகள் வெளிவந்தபோது One Nation கட்சியின் Mark Latham தனது டுவிட்டர் கணக்கில் "plotting to kill senior federal MPs and blow up Sydney Opera House and police/train stations" என்றும் "try avoiding" the student என்றும் பதிவுசெய்த கருத்துக்கள், Mohamed Nizamdeen மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்டு ஒரு மாதத்துக்கு பின்னரும் அவரது டுவிட்டரிலிருந்து நீக்கப்படவில்லை.

இது தொடர்பில் Mohamed Nizamdeen சார்பில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு போவதற்கு முன்னரே இருதரப்பு சமரசத்தின் மூலம் தீர்க்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
Mark Latham தரப்பிலிருந்து கணிசமானளவு நட்டஈடு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், அந்த தொகை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஒரு லட்சம் டொலர்களுக்கு அதிகமாக இருக்கலாம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த இலங்கை மாணவருக்கு வெற்றி! Reviewed by Author on October 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.