அண்மைய செய்திகள்

recent
-

கனடா வரலாற்றில் முதல் முறையாக தொங்கு நாடாளுமன்றம்? -


கனடா தேர்தலில் ஆளுங்கட்சியான லிபரல் கட்சியானாலும் சரி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியானாலும் சரி இரண்டுமே பெரும்பான்மை பெறாது என்றும், அதனால் கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக தொங்கு நாடாளுமன்றம் அமையும் ஒரு சூழல் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமரின் மகன் என்ற பலமான பின்னணியுடன் அரசியல் களமிறங்கிய ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு பெரும் வெற்றியை பெற்றாலும், ஊழல்களும், பெரும் எதிர்பார்ப்புகளும் அவரது பிம்பத்தை சேதப்படுத்திவிட்டன.
40 நாட்கள் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி தூற்றியும் லிபரல் கட்சியினருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் ஆளுக்கு 31 அல்லது 32 சதவிகிதம் ஆதரவுதான் கிடைக்கும்போலிருக்கிறது.

கடந்த 84 ஆண்டுகளில் இல்லாதபடி, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட ஒரு பிரதமர் நம்பிக்கை இழப்பது இம்முறையாகத்தான் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
2015இல் ட்ரூடோ கனடா பிரதமரானபோது, பல நாடுகளும் அவரை அண்ணாந்து பார்த்தன.

டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியைப் பார்த்து நொந்து போயிருந்த பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று, ட்ரூடோ ஏன் நமது ஜனாதிபதியாகக்கூடாது என்று அட்டைப்படத்துடன் செய்தி வெளியிட்டது.
ஆனால் இன்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, மீண்டும் ட்ரூடோவை தேர்ந்தெடுங்கள் என்று ட்ரூடோவுக்காக சிபாரிசு செய்யுமளவுக்கு கீழே இறங்கிவிட்டார் ட்ரூடோ.அதற்கு முக்கிய காரணமாக இருந்த விடயங்களில் ஒன்று கருப்பு நிறம் பூசிய முகத்துடன் வெளியான ட்ரூடோவின் புகைப்படங்கள்.

அடுத்தது தனது ஆட்சியில் பெரிய ஊழல் ஒன்று நடந்தபோது, அதை கையாள முடியாத அவரது திறன். ட்ரூடோவின் புகழ் மங்க ஆரம்பித்தது.
ஆக, தற்போது எந்த கட்சியும் நாடாளுமன்றத்தின் 338 இருக்கைகளில் பெரும்பான்மையை பெறப்போவதில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியினர் அதிக இருக்கைகளை வெல்வார்கள் என்றாலும், அவர்களால் அருதிப்பெரும்பான்மையை பெற இயலாது. வேண்டுமென்றால், Bloc Québécois கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்யலாம்.
அதேபோல், ட்ரூடோவின் லிபரல் கட்சியும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள NDPயின் உதவியை நாடலாம்.
எப்படியும் கனடா தேர்தலில், யாருக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காது என்றே தற்போதைய சூழலில் தோன்றுகிறது.

கனடா வரலாற்றில் முதல் முறையாக தொங்கு நாடாளுமன்றம்? - Reviewed by Author on October 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.