அண்மைய செய்திகள்

recent
-

அகதியாக இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை திருப்பியவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது

கடந்த வாரம் இந்தியாவில் அகதிகளாக இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தார்கள் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் யாழ்பானத்தை சேர்ந்த நபர் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் கீழும் மன்னார் அரிப்புபகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் நபர் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டதரணி டினேஸன் தெரிவிக்கையில்

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து பாதுகாப்பான சூழல் காணப்படுகின்றது என்பதன் அடிப்படையில் குறித்த இரு நபர்களும் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடந்த மாதம் 28 திகதி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும்.

குறித்த இரு நபர்களில் யாழ்பாணத்தை சேர்ந்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த நபர் மீது குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறியதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதி மன்றத்தால் இன்றுவரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார் எனவும்

மற்றைய அரிப்பை சேர்ந்த நபரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்ட போது குறித்த நபரின் சகோதரர் ஒருவர் முன்னைனால் போராளி எனவும் குறித்த நபர் விடுதலை புலிகளில் கட்டய போர் பயிற்சியை பெற்றுள்ளார் என்பதை புலனாய்வாளர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து குறித்த நபர் பயங்கரவாத தடைசட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முண்னிலைபடுத்தப்பட்டு இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கை அரசாங்கத்தின் இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு சட்டமாக காணப்படுகின்றது குறித்த அரிப்பை சேர்ந்த நபர் விடுதலை புலி அமைப்பை சேர்ந்த நபர் என்ற அடிப்படையிலேயே அவர் மேல் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் யுத்தை நிறைவடது 10 வருடங்களின் பின்னர் அதாவது இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு 10 வருடங்கள் என்று மார் தட்டிக்கொள்கின்ற இந்த சமயத்தில் யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே தாய்னாட்டில் இருந்து அகதிகளாய் இந்தியாவிற்கு சென்று தற்போது மீண்டும் தாய் நாட்டிற்கு வந்த ஒருவரை மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உட்புகுத்தி அவரை கைது செய்வது என்பது மீண்டும் அவர்களுடைய வாழ்கையை கேள்விக்குறியாக்குவது போன்றது இவ்வாறான செயல்கள் மனித உரிமைக்கு எதிரான செயலாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கையில் அமைதி நிலவுவதாகவும் எனவே இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்ற மக்களை தாய்நாட்டுக்கு திரும்பும்படி இந்திய அரசுக்கும் இலங்கை அகதிகளுக்கும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் பல மக்கள் இந்தியாவில் இருந்து விமானம் மூலமும் கடல்வழி மூலமும் இலங்கைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர் அவ்வாறு வரும் போது சிலர் சட்ட பூர்வமாக UNCHER ஊடாக பதிவு செய்து சட்டபூர்வமாக வருகின்றனர் சிலர் சூழ்னிலைகள் காரணமாக சட்டவிரோதமாக கடல் வழியாக வருகின்றனர்.

அவ்வாறு சட்ட விரோதமாக கடல்வழியாக வருகின்ற நபரை கைது செய்து குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் கீழ் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் மீண்டும் ஒரு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதாகும்.

நபர் ஒருவரோ அல்லது அவரின் குடும்பமோ உறவினர்களோ இவ்வாறு போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் தொர்பு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் மீண்டும் தாய்நாட்ட்டுக்கு வர முயலுகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான கைதுகள் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே காணப்படுகின்றது இவ்வாறான கைதுகள் காரணமக இந்தியாவில் அகதிகளாக உள்ள தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத அச்ச சூழ்நிலையையே ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையிடம் குறித்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒரு சட்டத்தை கொண்டுவருவதாக கூறிய போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இன்றுவரை பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளதுடன் இன்றுவரை பல கைதுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம் பெறுவதாகவும் அதனால் இன்றுவரை பலர் அரசியல் கைதிகளாக நீண்டவருடம் சிறையில் அடைபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் சுகந்திரமாக வருவதற்கான ஒரு பாதுகாப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த அரிப்பை சேர்ந்த நபருக்கு மன்னார் நீவான் நீதி மன்றத்தாலோ மன்னார் மேல் நீதி மன்றத்தாலோ பிணைவழங்க முடியாத நிலை காணப்படுவதாகாவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பெயரில் மாத்திரமே விடுவிக்க முடியுமே தவிர குறித்த சந்தேக நபர் பிணையில் வெளிவர முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கள் முகாம்களில் ஒருலட்சம் பேர் அகதிகளாக உள்ளனர் அவர்களில் கடந்த மாதம் 17 திகதி 146 நபர்கள் தாயகம் திரும்புவதற்கான விண்ணப்பங்களை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் கையளித்துள்ள நிலையில் குறித்த கைதானது இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

அகதியாக இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை திருப்பியவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது Reviewed by Author on October 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.