அண்மைய செய்திகள்

recent
-

சிலிர்ப்பு goosebumps ஏற்படுவதற்கான ஆச்சரியம் தரும் காரணம் -


சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும்.இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.
இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும்.
இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது.

இதன்போதே சிலிரிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய விலங்குகளில் இந்த ஹோர்மோன் ஆனது குளிரை உணரும்போதோ அல்லது பதட்டத்தை உணரும்போது வெளிவிடப்படும்.
ஆனால் மனிதர்களில் குளிர், பயத்தை உணர்தல், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் பதட்ட நிலமைகளின்போது அதிரீனலின் ஹோர்மோன் வெளிவிடப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி கண்ணீர் விடும்போதும், உள்ளங்கைகள் ஈரலிப்பாக காணப்படும்போதும், இதயத்துடிப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள், கைகள் நடுங்கும்போது மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் என்பவற்றின்போதும் இந்த ஹோர்மோன் வெளிவிடப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


சிலிர்ப்பு goosebumps ஏற்படுவதற்கான ஆச்சரியம் தரும் காரணம் - Reviewed by Author on October 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.