அண்மைய செய்திகள்

recent
-

இந்திய இலுவைப்படகுக்கான எரிபொருள் தீந்தமையாலே இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தது-

அண்மையில் மன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய இலுவைப்படகானது எரிபொருள் தீர்ந்தமையாலேயே  இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில் படகு உரிமையாளருக்கு மன்று விடுத்த அழைப்பாணையைத் தொடர்ந்து இந்திய படகு உரிமையாளர் மன்றில் ஆஐராகியிருந்தார்.  விசாரனைமூலமே இதை கண்டறியமுடியும் என மன்று இவ் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

கடந்த 27.07.2019 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள்
இராமேஸ்வரத்திலிருந்து மீன் இறால் பிடிப்பதற்காக பாக்குநீர்
கடற்பரப்புக்குள் தங்கள் மீன் பிடியில் ஈடுபட்டபோது படகுக்கான எரிபொருள்
முடிந்தமையாலேயே இந்நிலை  ஏற்பட்டுள்ளது எனவும் அப்பொழுது காலநிலை சரியற்ற நிலையில் இருந்தமையாலும் இவர்களின் படகு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளதாக இந்திய மீனவர்களால்
தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ் படகுடன் ஏழு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 28.07.2019 அன்று மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் அன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஐர் செய்யப்படடிருந்தனர்.

இதைத்தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படடிருந்தனர்.

பின் கடந்த 08.08.2019 இவர்களின் வழக்கு விசாரனைக்காக மன்னார் மாவட்ட
நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை காவல் அதிகாரிகளினால்
முன்னிலைப்படுத்தப்பட்டபோது இவ் இந்திய மீனவர்கள் தங்கள் குற்றங்களை நீதவான் முன்னிலையில் ஒத்துக்கொண்டனர்.
இதைத் தொடாந்து இந்த ஏழு மீனவர்களும் மிரிகானா முகாமூடாக இவர்களை தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்க நீதவான் கட்டளைப்பிறப்பித்தார்.
 அதேவேளையில் கடந்த 08.08.2019 அன்று இடம்பெற்ற இவ் வழக்கின்போது நீதவான் இவ் படகின் உரிமையாளருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை தொடர்ந்து இவ் படகின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை (18.10.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் மன்னார் சட்டத்தரனி செல்வராஜா டிணேசன் இவ் படகு உரிமையாளரை முற்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கு சட்டத்தின் 15ஆம் உ பிரிவின் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு
படகுகள் விடயமாக தெரிவிப்பது அவ் வழக்கை ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றது எனவும்

அத்துடன் 15 ஏ பிரிவு கூறுகின்றது ஒரு தவறானது தாம் அறியாமல்
புரியப்பட்டதென அல்லது அவரது பணிகளில் தன்மையையும் தொடர்புபட்ட
சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு அத்தவறு புரியப்படுவதைனைத்
தடுப்பதற்குத் தாம் பிரயோகித்திருக்கவேண்டிய உரிய எல்லா வழப்புக்கவனத்தையும் தாம் பிரயோகித்தாரென அவர் எண்பித்தால்
இச்சட்டத்தின்கீழான அத்தவறுக்குக் குற்றவாளியாகக் கருதப்படலாகாது
என சட்டம் தெரிவிக்கின்றது.  என சட்டத்திரனி செல்வராஜா டினேசன் மன்றின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதேநேரத்தில் சட்டம் ஒன்று கூறுகின்றது அவர் குற்றவாளியாக காணப்பட்டால் படகை பறிமுதல் செய்யலாம் எனவும் தெரிவிக்கின்றது எனவும் இங்கு மன்றில் சுட்டிக்காட்டினார்.
ஆகவே இவ் வழக்கை விசாரனை ஒன்றின் மூலமே எண்பிக்க முடியும் என்ற கருத்தில் கொண்டு இவ் வழக்கை இம்மாதம் (25.10.2019) மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்காக நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா ஒத்திவைத்துள்ளார்.


இந்திய இலுவைப்படகுக்கான எரிபொருள் தீந்தமையாலே இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தது- Reviewed by Author on October 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.