அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயல்பாடுகளை அறிந்து கொள்ள மன்னார் ஆயர் பிரஜைகள் குழு அலுவலகத்துக்கு திடீர் விஐயம்.

யுத்தக் காலக்கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினால் திரட்டப்படும் விபரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்வதற்காக   சுவிஸ்லாந்து உயர் ஸ்தானிகர் பிரதிநிதிகள் அன்மையில் மன்னார் ஆயரை சந்தித்து உரையாடியுள்ளனர். இதைத் தொடாந்து  மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்துக்குச் திடீரென விஐயம் ஒன்றை மேற்கொண்டு
அங்குள்ள செயல்பாடுகளை அலசி ஆராய்ந்தார்.

யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சுவீஸ் நாட்டின் உதவியுடன் மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழு வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள எட்டு மாவட்டங்களிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை கடந்த ஒரு சில வருடங்களாக திரட்டிக் கொண்டு வருகின்றது.

இங்கு திரட்டப்படும் விபரங்கள் அடங்கிய கோவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் எனவும் அவைகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் முகமாக சுவீஸ் நாட்டு உயர் ஸ்தானிகர் பிரதிநிதிகள் மன்னார் ஆயரைச் சந்தித்து இது சம்பந்தமாக அன்மையில் மன்னாருக்கு வருகை தந்து ஆயரிடம் வினவியுள்ளனர்.

இவற்றை ஆராயும் நோக்குடன் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழுவுக்கு போஷகராகஇருந்து செயல்படும் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை நேற்று புதன் கிழமை (09.10.2019) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்துக்கு திடீர் விஐயத்தை மேற்கொண்டார்.

அப்பொழுது மன்னார் மாவட்ட பிரiஐகள் குழுத் தலைவர் அருட்பணி
அ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இவ் அமைப்பின் ஆளுநர் சபை
உறுப்பினர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் மன்னார் அமைப்பின் தலைவி அமரசிங்கம் றஞ்சினா, உப தலைவர் எஸ்.யோகநாதன், செயலாளர் பி.சர்மிளா மடுத்தீன் ஆகியோரும் பிரஜைகள்ரும் ஆயரை சந்தித்து உரையாடினர்.

இவ் வேளையில் வலிந்து காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பாக பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் இருந்தும் மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழுவில் பாதிப்படைந்துள்ள மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை சிதரடிக்காது மிகவும் நிதானமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்

இவ்சமயம் பாதுகாப்பு பிரிவினரிடம் மட்டுமல்ல இவ்  பிரஜைகள் குழுவின்
பெயரைப் பாவித்து முன்பு செயல்பட்ட ஒரு சிலராலும் ஏற்படும் செயல்பாடே
சவாலாக அமைந்துள்ளதாக பிரஜைகள் குழுவினர் ஆயரிடம் தெரிவித்தனர்.

இவ்வேளையில்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் மன்னார் அமைப்பின் தலைவி அமரசிங்கம் றஞ்சினா, உப தலைவர் எஸ்.யோகநாதன், செயலாளர் பி.சர்மிளா மடுத்தீன் ஆகியோhரும் ஆயரை இங்கு சந்தித்து உரையாடினர்.

அப்பொழுது இவர்கள் இங்கு ஆயரிடம் கருத்து தெரிவிக்கையில் சட்ட
திட்டங்களுக்கு அமைய நாங்கள் எங்கள் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்டு
மன்னார்  பிரஜைகள் குழுவுடன் இணைந்து எங்கள் உறவினர்களை தேடுவதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.ஆனால் முன்பு இவ் நிர்வாகத்தில் இருந்த ஓரிருவர் எங்கள் அமைப்பின்
பெயரைச் சொல்லி தகாத செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும்,

எங்கள் முயற்சியை சிதரடிக்கும் நோக்குடன் மட்டுமல்ல காணாமல்
ஆக்கப்பட்டோரின் பெயரை வைத்து இவர்கள் பணம் சம்பாதிக்கும்
செயல்பாட்டிலும் இறங்கி வருவதாகவும் இவர்கள் மிக கவலையுடன் ஆயரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.





காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயல்பாடுகளை அறிந்து கொள்ள மன்னார் ஆயர் பிரஜைகள் குழு அலுவலகத்துக்கு திடீர் விஐயம். Reviewed by Author on October 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.