அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணத்தில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவிப்பு -


வடக்கு மாகாணத்தில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வவுனியா, நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று பாடசாலையின் அதிபர் க.சிவநாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்களான ஜெ.சுதாத்தரன், அ.ஆனந்தகுமார் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண தடகளப் போட்டியில் 16 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் கே.காவியா தங்கப் பதக்கத்தினை பெற்றதுடன், 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 4ஆம் தர 100 மீற்றர் அஞ்சல் ஒட்டத்தில் அரிச்சந்திரகுமார், டனுசன், கரிகரசுதன், சரன்ராஜ், விஸ்வா, கபிஸ்கரன் ஆகிய ஆறு மாணவர்கள் தங்கப் பதங்கத்தினை பெற்றுள்ளனர்.
அத்துடன் ஒட்ட நிகழ்ச்சியில் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் 200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் மற்றும் 100 மீற்றரில் வெண்கலப்பதக்கம் ஆகியவற்றை பி.அரிச்சந்திரகுமார் தனதாக்கி கொண்டதுடன் 1500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கத்தினை ச.டனுசன் தனதாக்கி கொண்டார்.

மேலும் 200 மீற்றர் மற்றும் 100 மீற்றரில் வை.கரிகரசுதன் 4ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் நீளம் பாய்தலில் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் எஸ்.கரிகரன் 4ஆவது இடத்தினையும், 18 வயதின் கீழ் உயரம் பாய்தல் ஆண்கள் பிரிவில் கே.சரன்ராஜ் வெண்கலப்பதக்கத்தினையும், 4 தர 400அ அஞ்சல் ஓட்டத்தில் பி.அரிச்சந்திரகுமார், ச.டனுசன், வை.கரிகரசுதன், கே.சரன்ராஜ், எஸ்.விஸ்வா, வி.கபிஸ்கரன் ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.

பெருவிளையாட்டுக்களில் 16 வயதின் கீழ் பெண்கள் வலைப்பந்தாட்டம் 2ஆம் இடத்தினையும் 18 வயதின் கீழ் பெண்கள் கொக்கி 3ஆம் இடத்தினையும் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் தனதாக்கி கொண்டுள்ளது.
2019ஆம் ஆண்டிற்கான வடமாகாணப் பாடசாலைகளிற்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 18 வயது ஆண்கள் பிரிவு மெய்வல்லுனர் சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டதுடன் வடமாகாணப் பாடசாலைகள் தரப்படுத்தலில் வவுனிளயா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 8ஆம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் வவுனியா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப் போட்டிகளில் பங்குபற்றிய சாதனையாளர்களுக்கு பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்களினால் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதிக்கல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.யூட்பரதமாறன், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க செயலாளர் சி.சுவேந்திரன், நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வடமாகாணத்தில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவிப்பு - Reviewed by Author on October 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.