அண்மைய செய்திகள்

recent
-

ஓதியமலையில் தொடரும் வனத்துறையினரின் திட்டமிட்ட காணி அபகரிப்பு -


முல்லைத்தீவு, வெலிஓயா பகுதியில் வனத்துறையினர் பொதுமக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரித்து வருவதாக குறித்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு,வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒதியமலை -வெலிஓயா எல்லைக்கிராமங்களில் கருவேப்பமுறிப்பு குளம் மற்றும் கிடாய்விழுத்தி குளம் ஆகிய இரண்டு குளங்களின் நடுவாக சுமார் 1100 மீற்றம் நீளம் கொண்ட யானைவேலிகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெலிஓயா பிரதேச செயலாளரிடம் ஒதியமலை கமக்கார அமைப்பினரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்போது தமிழர் பாரம்பரிய வயல் நிலங்கள் வனவளப்பிரிவினரால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளதுடன் வயல் நிலங்களை பங்கிட்டு வழங்கி புதிய வீதிகள் அமைக்கும் பணிகளும் தொடர்கின்றதாகவும் கமக்கார அமைப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வனவளப்பிரிவினரால் அபகரிக்கப்பட்டுள்ள கருவேப்பமுறிப்பு குளம், கிடாய்விழுத்தி குளம் மற்றும் அதனை அண்டிய வயல்நிலங்களையும் மீளப் பெற்றுத்தர மக்கள் பிரதிநிதிகள் ஆவன செய்யவேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓதியமலையில் தொடரும் வனத்துறையினரின் திட்டமிட்ட காணி அபகரிப்பு - Reviewed by Author on October 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.