அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் மதகுருக்களால் 2000க்கும் மேற்பட்டோர் துஷ்பிரயோகம்: பாதிரியார்கள் மாநாட்டில் முக்கிய அறிவிப்பு -


நாட்டில் மதகுருக்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பணம் வழங்க பிரான்ஸ் கிருத்துவ பாதிரியார்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கத்தோலிக்க மதகுருக்களின் உறுப்பினர்களால் குழந்தைகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பணம் செலுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் கிருத்துவ பாதிரியார்கள் வாக்களித்துள்ளனர்.

பிரான்ஸ் கிருத்துவ பாதிரியார்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒரு ‘மொத்த தொகை’ வழங்க ஒவ்வொரு பாதரிரியாரும் தங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வார்கள்.
பிரான்ஸின் சட்ட அமைப்போ அல்லது திருச்சபையோ பணத்தை செலுத்த வேண்டும், இதை இழப்பீடாக வழங்கும் நோக்கம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் தேவலாயத்திற்குள் நடந்த பல்வேறு தவறுகளில் ஏற்பட்டது என்பதை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்காக நிதி வசூலிக்கப்படும் என்றும், செலுத்த வேண்டிய தொகை இன்னும் தீர்மானிக்கப்பட உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, தேவாலய அதிகாரிகளுக்கு எத்தனை பேர் பணம் செலுத்த தகுதியுடையவர்கள் என்று தெரியவில்லை.
ஆனால் பிரான்சில் கடந்த 20 ஆண்டுகளில் கத்தோலிக்க மதகுருக்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட 2,800 பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து ஒரு சுயாதீன ஆணையம் சாட்சியங்களை சேகரித்துள்ளது.

துஷ்பிரயோக முறைகேடுகள் உலகெங்கிலும் தேவாலய நம்பகத்தன்மையை சிதைத்துள்ளன, மேலும் சில தேவாலயங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலுத்தியதால் திவால்நிலை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பிரான்சில் மதகுருக்களால் 2000க்கும் மேற்பட்டோர் துஷ்பிரயோகம்: பாதிரியார்கள் மாநாட்டில் முக்கிய அறிவிப்பு - Reviewed by Author on November 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.