அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு-படம்

மன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு இன்றைய தினம் வியாழக்கிழமை(21) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மன்னார் நகர சபையின் 21 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை(21)காலை 10.30 மணியளவில் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மதிப்பிடு தொடர்பான வரைவு சபையில் திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் 2019 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக வட்டார ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி பணிகள், வடிகான் அமைப்பு,குளங்கள் புனரமைப்பு, புதிய வீதிகள் அமைத்தல், கழிவு அகற்றல் உற்பட பல்வேறு வேளைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு-படம் Reviewed by Author on November 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.