அண்மைய செய்திகள்

recent
-

இனம் காணப்பட்ட வாக்கு சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு அமைக்கப்படும்-மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன்

எதிர்வரும் இரண்டு வாரங்களும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் செயல்பாடாக அமையுமென்பதால் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறாது செயல்படுமாறும் கேட்டுக்கொள்ள்பட்டதுடன் சில வாககளிப்பு நிலையங்களில் அரசியல் தலைவர்கள் முரண்பட்ட சம்பவங்களும் காணப்பட்டதால் குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு அமைக்கப்படும் என மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர்  ஜே.ஜெனிற்றன் (J.JENITON) இவ்வாறுதெரிவித்தார்.

-மன்னார் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகரும் மன்னார் அரசாங்க அதிபருமான சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், கட்சி முகவர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கான தேர்தல் முன்னோடிக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கள் கிழமை (04.11.2019) பிற்பகல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர்ஜே.ஜெனிற்றன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது ஐனாதிபதி தெரிவுக்கான முன்னோடி நடவடிக்கைகளை தேர்தல்
திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இந்தவகையில் மன்னார் மாவட்டத்திலும் கடந்த ஒன்ரரை மாதங்களாக தேர்தல் தொடர்பான செயல்பாடுகளில் சட்டங்கள், எமக்கு கிடைப்பபெறும் முறைப்பாடுகள், எதிர்காலத்தில் தேர்தல் முடிவுவரைக்கும் நாம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய வேண்டிய நிலை இருக்கின்றது.

அதற்காகவே இவ் கலந்தரையாடலுக்கு மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கொண்ட கட்சி முகவர்களை அழைத்து தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தெளிவுப்படுத்த எமக்கு கடற்பாடு உண்டு.தேர்தலை முன்னிட்டு இனிவரும் இரண்டு வாரங்களும் சிக்கல் நிறைந்ததாக  காணப்படும். தேர்தல் சட்டங்களை மீறும் நாட்களாகவே இவை இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கடந்த தேர்தலில் 30 முறைபாடுகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருந்தன. ஆனால் பின் இவ் வழக்குகளை பொலிசார் வாபஸ்
செய்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.  மன்னார் மாவட்ட செயலகத்தில் 8 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கும்தலா இரண்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தினால் போதுமானது என நினைக்கின்றேன்.

வெளியில் ரோந்து  சேவையில் அதிகமான பொலிசார் ஈடுபடுவது நலமாகும். இதை பொலிஸ் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

கடந்த தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் வாக்களிக்கும் நிலையங்களில் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு.

ஆகவே இவ்வாறு அடையாளமிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் விஷேட பொலிஸ் பாதுகாப்பு போடுவது நலம் என நினைக்கின்றேன் என மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.




இனம் காணப்பட்ட வாக்கு சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு அமைக்கப்படும்-மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் Reviewed by Author on November 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.