அண்மைய செய்திகள்

recent
-

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு -இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்திக்க கோரிக்கை:

 இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்தும்   நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் இன்று சனிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர் வரும் 29ஆம்  திகதி இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்தித்து பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

  அனைத்து விசைபடகு மீனவ அமைப்புகள் இன்று  ராமேஸ்வரம்  மீன் பிடி துறைமுகத்தில்  அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில்  இலங்கையில்  ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு  தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி  மீன் பிடி சாதனங்களை  சேதப்படுத்துவதை கண்டித்தும், எதிர் வரும் 29ஆம் திகதி இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் மீனவர் பிரச்சனை குறித்து பேசி  நிரந்தர தீர்வுகானப் வேண்டியும், இலங்கையில் மீட்கப்படாத படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கவும் நல்ல நிலையிலுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள்  பேச்சுவார்த்தையை துவங்கி தீர்வு காணப்பட வேண்டும் அதே போல் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை தமிழக மீனவர்கள் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை   வலியுறுத்தியும் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து மீனவர் சங்க அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

  மீனவர்களின்  வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டுள்ளது .

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழப்பதோடு நாளொன்றுக்கு ரூ 4 கோடி  வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 பேட்டி

   சேசுராஜ் தலைவர் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கம்


ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு -இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்திக்க கோரிக்கை: Reviewed by Author on November 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.