அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்-படம்

நாளை சனிக்கிழமை இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை 15/11/2019 மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

நாளை சனிக்கிழமை இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெறவுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து ஆகக்கூடிய தூரத்தை கொண்ட வாக்களிப்பு நிலையமாக 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இரணை இலுப்பைக்குளம் வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் வடக்கு பகுதியில் வெள்ளாங்கும் வாக்களிப்பு நிலையம் 45 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.தெற்கு திசையில் மருச்சிக்கட்டி வாக்களிப்பு நிலையம் 60 கிலோ மிற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

ஏனைய வாக்களிப்பு நிலையங்கள் அணைத்தும் அதற்கு உற்பட்டதாக அமைந்துள்ளது.வாக்களிப்பு நிலைய பணிகள் இடம் பெறுவதற்காக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களை தலைமையாக கொண்டு சகல உத்தியோகஸ்தர்களும், வாக்குப் பெட்டிகளும் இங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியில் இருந்து காலை 10.45 மணிக்குள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்தலில் வாக்களிக்க 89 ஆயிரத்து 403 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க உள்ளனர்.வாக்கு என்னும் நிலையங்கள் 8 அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கடமைகளை மேற் கொள்ள 1690 அரச அதிகாரிகள் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 350 பொலிஸார் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.அவர்களில் 152 பேர் 76 வாக்களிப்பு நிலைங்களில் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மாவட்டச் செயலகம் மற்றும் நடமாடம் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-இது வரை 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.அவை பாரிய அளவில் இல்லை. அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் தாயர் படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு விசேட வாகன ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 101அரச,தனியார் வாகனங்கள் இவ்வாறு பயண்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தளத்தில் உள்ள மன்னார் மாவட்ட வாக்களர்கள் 122 பேரூந்துகளில் மன்னாரிற்கு வருகின்றனர்.


தேர்தல் ஆணைக்குழுவின் அணுமதியில் பெயரில் வருகின்றனர்.மாவட்டத்தில் அவ்வாறான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்-படம் Reviewed by Author on November 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.