அண்மைய செய்திகள்

recent
-

பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முப்படையினரிடம் -


பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக பாதுகாப்பு படையினரிடம் வழங்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் இராணுவம் உட்பட முப்படையினரை பயன்படுத்தி பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஜனாதிபதியின் நோக்கம் என கூறப்படுகிறது.

நாட்டின் ஜனாதிபதியாக முன்னாள் இராணுவ அதிகாரி பதவிக்கு வந்துள்ளார். அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளராக இறுதிக் கட்ட போரின் போது கடமையில் ஈடுபட்டிருந்த கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் இறுதிக்கட்ட போரில் திறம்பட செயற்பட்ட அதிகாரி ஆவார்.
இவர்கள் மூன்று பேரும் இராணுவத்தின் கஜபா படைப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என்பது விசேட அம்சமாகும். இறுதிக் கட்ட போரின் போது இவர்கள் மூவருக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

இதன் காரணமாக பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, கமல் குணரத்ன மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் போதைப் பொருளை ஒழிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் அதனை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.


பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முப்படையினரிடம் - Reviewed by Author on November 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.