அண்மைய செய்திகள்

recent
-

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி. மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன்

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (14.11.2019) முதல்
மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் முக்கிய இடங்களுக்கான பலத்த
பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று 76 வாக்களிப்பு
நிலையங்களுக்கும் வாக்குகள் அளிக்கும் பெட்டிகள் பாதுகாப்பான முறையில்
காலையிலேயே எடுத்துச் செல்ல சகல ஆய்த்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.

ஐனாபதி தேர்தலின்போது வன்னித் தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இவற்றில் 89 ஆயிரத்து 403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களை மன்னார் மாவட்ட செயலகத்தில் 8
நிலையங்களில் எண்ணுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இவ் தேர்தலை முன்னிட்டு நேற்று வியாழக் கிழமை முதல் மன்னார் மாவட்ட
செயலகத்துக்கு ஒரு வழி பாதை மட்டுமே தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று வெள்ளிக் கிழமை 76 சாவடிகளுக்கும் உத்தியோகத்தர்கள் மற்றும்
வாக்குகள் இடும் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான பேரூந்துகள் எல்லாம்
நேற்று வியாழக் கிழமையே மன்னார் பாலத்தடியில் தயார் நிலைக்கு
வைக்கப்பட்டுள்ளன.

நேற்று வியாழக் கிழமை முதல் அனைத்து வாக்குச் சாவடி நிலையங்களையும் ஆய்த்த நிலைக்கு வைப்பதற்காக அப்பகுதி கிராம அலுவலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் முறைப்பாடு முகாமைத்து நிலையங்கள் மூன்று
நிர்மானிக்கப்பட்டுள்ளன. எருக்கலம்பிட்டி, முசலி மற்றும் மடு
பகுதிகளிலேயே இவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ் தேர்தலை முன்னிட்டு மன்னார் நகர், நானாட்டான், முசலி,
மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களிலும் இணைப்பு நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்
300 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் தேர்தல் வேளையில் பொலிசாரின் ரோந்துகளும் நடாத்துவதற்கான
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி. மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் Reviewed by Author on November 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.