அண்மைய செய்திகள்

recent
-

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்பு எமது எதிர் பார்ப்பு நிறைவேறும் என நம்பியிருந்தோம். எந்த பலனும் கிடைக்கவில்லை-மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க திரு அவை-படம்



கொடிய யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தமிழர்களாகிய எமது கோரிக்கையை, முன்னுரிமைப்படுத்தி அரசு சிந்தித்து செயற்பட வேண்டுமென முன்வைத்திருந்தோம்.
 தேர்தலின் பின்பாக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்பும், எமது எதிர்பார்ப்பு நிறைவேறும்மென நம்பியிருந்தோம். ஆனால் இதுவரை எந்தவித பலனும் எமக்குக் கிடைக்கவில்லை என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க திரு அவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க திரு அவையின்   இன்று சனிக்கிழமை காலை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கத்தோலிக்க திரு அவை சார்பாக மன்னார் மறை மாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை விடுத்துள்ள  அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க திரு அவையானது நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றது.

 எனவே கத்தோலிக்க மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறை வேற்றக்கூடிய முறையில் நமது திருச்சபையில் 2ஆம் வத்திக்கான் சங்க ஏடு கிறிஸ்தவ மக்களுடைய கடமைப்பாட்டையும், உரிமைகளையும் தெளிவு படுத்தி உள்ளது.

 இதன் அடிப்படையில் 'நாட்டு அரசியல் சமூகத்தில் இருக்கும் தனிப்பட்ட அழைத்தலைக் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
 அவர்கள் பொறுப்புணர்வைத் தங்களிடத்தில் வளர்த்துக்கொண்டு, பொது நலனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம், எடுத்துக்காட்டாக விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று வத்திக்கான் சங்கம் கூறுகிறது.

எனவே இதன் அடிப்படையிலே 'நாட்டு அரசியல் சமூகத்துக்கும், ஆட்சித்துறை அமைப்புக்கும் அடித்தளமாக அமைவது மனிதரின் இயல்பே ஆகும் என்பது வெள்ளிடைமலை.

எனவே நாட்டு அரசியல் சமூகமும், அதே நேரத்தில், தங்களுக்குப் பொருத்தமான ஆட்சிமுறையை அமைப்பதும், ஆட்சியாளர்களை அமர்த்துவதும், குடிமக்கள் சுதந்திரமாக நிர்ணயிக்கும் காரியங்களாகும்.

ஜனாதிபதியை தெரிவுசெய்வது குறித்து மறைமாவட்ட மக்கள் புத்திசாலிதனமாகவும், தைரியமாகவும் செயற்படுவதுடன், தெரிவுசெய்யும் வேட்பாளர் நாட்டினதும், எமது மறைமாவட்டத்தினதும், தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும், சகல மக்களினதும் சமத்துவ வாழ்வையும் சமய சுதந்திரத்தையும் அனைத்து மக்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்ளைகளை நிலைநிறுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்கும் வேட்பாளரையே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று எமது கத்தோலிக்க மக்கள் அனுபவித்த மிலேச்சதனமான தாக்குதலை கருத்தில் கொண்டு எமது நாட்டில் மதவாதம் மற்றும் இனவாதம் ஒழிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சுய நிர்ணயத்தோடு உழைக்கவும், எமது நாட்டில் உள்ள இன மத மக்களிடையே சக வாழ்வு ஏற்படவும் வழிசமைக்கக்கூடிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதிர்கால ஜனாதிபதியும் அரசாங்கமும் இன வேறுபாடற்ற சிறந்த தேசிய கொள்ளைகளை வகுக்க வேண்டுமென்றும் நாங்கள் எதிர்பாக்கின்றோம். மத சுதந்திரம் நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் தமிழ் மக்களுடைய தகுதிமிக்க கோரிக்கைகள் ஆகியவற்றை மையப்படுத்திய கொள்கை திட்டமிடலுடன் அடுத்த தலைமுறைக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்து மதத்தவர், இனத்தவரின் சமத்துவத்தை உறுதிசெய்வதற்கு வழிவகுக்க வேண்டும்.

எதிர்கால அரசியல் தலைவர்கள் மக்களின் நிலை அல்லது அவர்களின் பதவி நிலையை பொருட்படுத்தாமல், சட்டத்தின் முன் சமமாக இருக்கும் வகையில் அனைத்து குடி மக்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்யுமாறு நாங்கள் மனதார கேட்டுக்கொள்கின்றோம்.
கொடிய யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின்; நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தமிழர்களாகிய எமது கோரிக்கையை, முன்னுரிமைப்படுத்தி அரசு சிந்தித்து செயற்பட வேண்டுமென முன்வைத்திருந்தோம்.

 தேர்தலின் பின்பாக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்பும், எமது எதிர்பார்ப்பு நிறைவேறும்மென நம்பியிருந்தோம். ஆனால் இதுவரை எந்தவித பலனும் எமக்குக் கிடைக்கவில்லை.

 ஆகவே கீழ்க்காணும் விடயங்களில் அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு, சுயமாக முடிவெடுக்ககூடிய ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள்.

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் மக்களுடைய அனைத்து கோரிக்கைகளுக்கும் விசேட கவனம் செலுத்தும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைபற்றி ஆக்கபூர்வமான முடிவினை உடனடியாக எடுத்தல்,அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உடன் முடிவு எடுத்தல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கால தாமதமின்றி விடுவித்தல், புனர்நிர்மாண அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை நிறை வேற்றக்கூடியவர்.இவ்வாறான ஒருவருக்கு எம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

மேற்குறித்த காரணிகளின் அடிப்படையிலும், இன்றைய சமூக கலாச்சார அரசியல் மாற்றங்களுக்கும் ஏற்ப சிந்தித்து செயலாற்ற வேண்டிய சமூக பொறுப்பில் திரு அவை உள்ளது.

நிறைவாக அனைத்துத் தமிழ்பேசும் மக்களும் தமது உரிமைகள், கடமைகள் மட்டில் கவனம் செலுத்தி, பொதுநலனை மேலும் மேம்படுத்துவதற்காக தங்கள் வாக்குகளைச் சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்புமிகு கடமை எனவும் திரு அவை எடுத்தியம்புகின்;றது.

இந்நிலையில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க பொது நிலையினர் ஆணைக்குழு எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஜனாநாயக உரிமையுடன் கூடிய, தமது மகத்துவமான வாக்கினை அளித்து, பொருத்தமான தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் என தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்பு எமது எதிர் பார்ப்பு நிறைவேறும் என நம்பியிருந்தோம். எந்த பலனும் கிடைக்கவில்லை-மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க திரு அவை-படம் Reviewed by Author on November 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.