அண்மைய செய்திகள்

recent
-

மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு


மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு இன்று 20/11/2019 காலை பொது வெளியரங்கில் கல்லூரிமுதல்வர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களின் தலைமையில் நூலகாஆசிரியர் திருமதி J.H.விஜயரஞ்சினி அவர்களின் ஒழுங்கமைப்பில் ஏனையாஆசிரியர்களின் மற்றும் மாணவ மாணவிகளின் பங்குபற்றுதலோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

"வாசிக்காமல் யாருக்கும் வளர்வதில்லை அறிவு நல் நூல்களின்றி அமையாது அறிவார்ந்த உலகு" கருப்பொருளில்  தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வுகளாக
தரம் 1 தொடக்கம் 5 வரை ஆரம்பபிரிவு 
  • வாசிப்புபோட்டி 
  • கட்டுரைப்போட்டி 
தரம் 6 தொடக்கம் 11வரை இடை நிலைப்பிரிவு 
  • வாசிப்பு 
  • கட்டுரை 
  •  விடுகதை 
  • கவிதை
  •  சிந்தனைத்துளிகள் 
 தரம் 12 தொடக்கம் 13வரை உயர் நிலைப்பிரிவு
  • கட்டுரை 
  • கவிதை 
இப்பேட்டிகளில் பங்கு பற்றி ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிச்சான்றிதழும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் 2018ம் ஆண்டு பொதுநூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றிச்சான்றிதழ் பெற்ற மாணவிகளுக்கும் கல்லூரிமுதல்வர் ஜனாப் M.Y.மாஹிர்  அவர்களால் விசேட பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், வாசிப்பத்னால் மனிதன் பூரணமடைகின்றான் வாசிப்போம் நல்மனிதராய்வாழ்வோம்.
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு Reviewed by Author on November 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.