அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையில் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட அமளி துமளியால் சபை ஒத்திவைப்பு-படங்கள்

மன்னார் பிரதேச சபையின் இருபதாவது அமர்வில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டதை முன்வைக்கப்பட இருந்தவேளையில் சபையில் ஏற்பட்ட அமளி துமளியால் சபை 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருந்தும் எதிர் கட்சியினர் நீண்ட நேரமாக சபையைவிட்டு வெளியேறாது உப தவிசாளரைவைத்து சபையை நடாத்த முனைந்து கொண்டிருந்ததும் காணக்கூடியதாக இருந்தது.

மன்னார் பிரதேச சபையின் இருபதாவது அமர்வில் 2020 ம் ஆண்டுக்கான வரவு
செலவு திட்டத்தை முன்வைக்கப்பட இருந்த சமயத்தில் எதிர் கட்சியைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தனது உரையை தொடங்க ஆரம்பித்த வேளையில் ஆளும் கட்சி உறுப்பினரின் குறுக்கீடீனால் இவ் சபையை தவிசாளர் 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07.11.2019) இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியிலுள்ள மன்னார் பிரதேச சபையின் 20 வது
மாதாந்த அமர்வு நேற்று வியாழக் கிழமை (07.11.2019) இதன் தவிசாளர்
எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் இடம்பெற்றது.

இவ் அமர்வில் 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்கும்
அமர்வாகவும் இருந்தது.

இந்த வரவு செலவு திட்டத்தை சபையில் கொண்டுவரப்பட இருந்த நிலையில் ஆளும் கட்சினரும் எதிர்கட்சியினரும் சபைக்கப்பால் நீண்ட நேரங்களாக
கலந்தாலோசனையில் இருந்தமையால் பத்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய அமர்வு பதினொரு மணிக்கே ஆரம்பிக்கப்பட்டது.

பின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்
அமர்வில்  பொதுஐன முன்னனி கட்சி உறுப்பினர் செபமாலை பீரீஸ் சுகயீனம்
காரணமாக இன்று சபைக்கு வருகை தரமாட்டர் என தெரிவித்திருந்த நிலையில் 21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்களே அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். சபை நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்கப்பட இருந்த சமயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ.கொன்சன் குலாஸ் எழுந்து தனது உரையை ஆரம்பிக்க முற்பட்டபோது ஆளும் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் திருமதி ஆர்.டிப்னா குரூஸ் குறுக்கிட்டு பேசுகையில் 2019 ம் ஆண்டில் மேற்கொள்ள திட்டமிட்ட பேசாலையில் சிறுவர் பூங்கா மற்றும் பேசாலை சந்தை ஆகியன நிர்மானிக்க திட்டமிட்டிருந்தபோதும் அவைகள் இன்னும் செய்யப்படாது நிலுவையில் இருக்கின்றன.

ஆகவே இவ்வாறான முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாது இருக்கும்பட்டசத்தில் 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இப்பொழுது சபையில் சமர்பிக்கக் கூடாது என வாதிட்டபோது இவ் உறுப்பினருக்கும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தவிசாளர் இந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது என
தெரிவித்து இவ் கூட்டத்தை  14 நாட்களுக்கு இவ் அமர்வை ஒத்திவைப்பதாக
தெரிவித்துவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து இவருடன் ஆளும்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் சபையைவிட்டு வெளியேறினர்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த ஏழு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இருவரும், ஈபிடிபி கட்சியைச் சார்ந்த ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த இருவரும் மொத்தம் 12 உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறாது சபையிலே நீண்ட நேரமாக அமர்ந்திருந்தனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உப தவிசாளர்
எம்முடன் இருப்பதால் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்ற கோஷத்துடன் இருக்க காணப்பட்டனர்.

அத்துடன் நேற்றைய (07) அமர்வில் 21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள்
சமூகமளித்ததில் 12 உறுப்பினர்கள் தொடர்ந்து சபைக்குள் இருப்பதால் உப
தலைவரை வைத்து கூட்டத்தை நடாத்தலாமா என்ற சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இவ் செய்தி எழுதும் வரை 2.15 மணி பிற்பகல்) இவ் 12 உறுப்பினர்களும் தொடர்ந்து சபைக்குள்ளேயே இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.






மன்னார் பிரதேச சபையில் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட அமளி துமளியால் சபை ஒத்திவைப்பு-படங்கள் Reviewed by Author on November 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.