அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் -


2019ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் தோற்றவுள்ளனர்.
அதேசமயம் 4987 பரீட்சை நிலையங்களில் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை அனுமதி அட்டையுடன், தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியாகும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
முறையான அடையாள அட்டை இல்லாத பரீட்சார்த்திகள் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட எழுத்து மூல ஆவணத்தையும் பயன்படுத்த முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதே சமயம் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை அல்லது ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட எழுத்து மூல ஆவணத்தையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது அடையாளத்தை உறுதிபடுத்துவற்கு செல்லுபடியாகும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டையோ அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க முடியும் என எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த இலங்கை பரிட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் - Reviewed by Author on November 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.