அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள மீனவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். சஜித் பிரேமதாச

மன்னாரில் மீன்பிடி கைத்தொழில் அபிவிருத்தி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கடற்தொழிலாளர்கள் தங்கள் மீன்பிடிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்குடன்
மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான என்னால் இயன்ற சகல
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மன்னாரில் இந்த தேர்தல் பிரச்சார மேடையிலே பெருந்தொகையான மக்கள்
மத்தியில் நான் உழரையாற்றுவதற்கு கிடைத்த நன்மைக்கு நன்றி கூறுகின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்க்படுகின்ற அபிவிருத்தி
சம்பந்தமான திட்டங்களை உங்கள் முன்வைப்பதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம்.

யுத்தத்தினால் பாதிப்படைந்த அனைத்து மக்களையும் என்னுடைய தலைமையின் கீழ் இனம் மதம் கட்சி பேதங்களை மறந்து மீண்டும் மீள்குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்வேன்.

மல்வத்தஓய அபிவிருத்தி திட்டத்தினுடாக நெளிக்குளம், நெடுங்குளம்
அகவிழங்குளம் போன்ற நீர் தேக்கங்கள் குளங்களை அபிவிருத்தி செய்து உங்கள் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

தலைமன்னார், பேசாலை, சிலாபத்துறை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வேன். தலைமன்னாரிலிருந்து திருகோணமலை வரை நான்கு வழிப்பாதைகளையும் அபிவிருத்தி செய்வேன்.

இவ்வாறு புத்தளத்திலிருந்து மன்னார் வீதியை வில்பத்துவ கானகத்துக்கு
எவ்வித பாதிப்பும் இல்லாதாவாறு இணைப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.

மன்னாரில் மீன்பிடி கைத்தொழில் அபிவிருத்தி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

கடற்தொழிலாளர்கள் தங்கள் மீன்பிடிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்குடன் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான என்னால் இயன்ற சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவசாயிகளுக்கான வாழ்வாரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பயிர் செய்கை, பழச் செய்கை, சேனைப்பயிர் செய்கை,  தேயிலை, இறப்பர்,
தென்னை போன்ற செய்கைளுக்கான இலவசமான பசளைகளை வழங்கி விவசாயத் துறையை வளப்படுத்துவேன்.

இந்த நாட்டிலே 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். அந்த
காலத்தில் எனது தந்தை பிரேமதாசா அவர்களே மாணவர்களுக்கு இலவச சீருடைகளும் மதிய போசனமும் வழங்கியிருந்தார்.

ஆனால் இப்பொழுதுள்ள எங்கள் பிரதிவாதிகள் அதை நிறுத்தியிருந்தார்கள்.

எதிர்காலத்தில் எங்கள் அரசானது இந்த 44 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு சீருடைகளும் ஒரு பாதணியும் இலவச மதிய போசனமும் வழங்குவேன் என்பதை உறுதியாக இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

புதிய தொழில் துறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எங்கள் அரசாங்கம் மேற்கொள்ளும்.

மன்னாரைப் பொறுத்தமட்டில் ஐந்து பிரதேச செயலகங்கள் இருக்கின்றன.

இந்த ஐந்து பிரதேசங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது மன்னாரில் மட்டுமல்ல நாடலாவிய அனைத்து பிரதேசங்களிலும் இந்த
கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.

இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான நோக்கமாகவே இது அமைகின்றது.

அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகளும் உருவாக்கப்படும்.

இதன்மூலம் தகல் தொழில்நுட்பம், கனணி தொழில்நுட்பம், ஆங்கில அறிவு
என்பவற்றை இலவசமாக வழங்கி இதிலிருந்து வெளியேறுகின்ற ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உருவாக்கப்படுகின்ற தொழில் பூங்கா என்கின்ற அந்த மையத்தினூடாக சேவையாற்றி சிறந்ததொரு கைத்தொழில் துறையைமேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எமது அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்பது உறுதி.

இது புதிய டிஐpட்டல் யுகத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக
இருக்கின்றது என்பதை இளைஞர் யுதவிகளுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். தற்பொழுது சமூர்த்தி என்ற திட்டம் நாடெங்கும் அமுலில் இருந்து
வருகின்றது. இந்த நாட்டில் ஏழ்மை என்பது இருக்கக்கூடாது என்பதற்காகவே
இந்த சமூர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.

அன்று எனது தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் சனசவிய என்ற திட்டத்தை அமுல்படுத்தியிருந்தார்.

அந்த திட்டத்தையும் இந்த சமூர்த்தி திட்டத்துடன் இணைத்து வழங்கி இந்த
நாட்டில் ஏழ்மையை நீக்குவேன்.

இந்த சனசவிய என்ற திட்டத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச
செயலங்கள் 153 கிராம அலுவலகர் பிரிவுகள், 707 சிறு கிராமங்களிலுள்ள
மக்களுக்கு இவ் திட்டம் வந்து சேரும் என நான் உறுதியாக தெரிவித்துக்
கொள்ளுகின்றேன்.

இத்துடன் பாலர் பாடசாலை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் எனது அரசில் நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இதில் கடமைபுரிகின்ற அனைத்து பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் எனது
அரசாங்கத்தில் அரச சம்பளம் வழங்கப்படும்.

அத்துடன் பாலர் பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் சிறுவர் பூங்காக்கள்
இத்துடன் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான பகல் போசனங்களும் வழங்கப்படும்.

அவற்றுடன் பாலர் பாடசாலையில் இலவச கல்வியையே எனது அரசு மேற்கொள்ளும். இதை நான் முக்கியமாக தெரிவிக்கின்றேன். இந்த நாட்டிலே அதிபட்ச அதிகாரப் பகிர்வை அனைவருக்கும் இன மத மொழி கட்சி பேதங்களின்றி வழங்க எனத அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என்பதை இந்த மன்னார் மண்ணிலிருந்தும் தெரிவிக்கின்றேன்.

நான் ஒரு சிறந்த பௌத்தன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பௌத்த கோட்பாடுகளை பின்பற்றும் ஒரு பௌத்தனாகவே இருக்கின்றேன்.

இந்த வகையில் இனத்தை வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ மதங்களை இனங்களை ஒருபோதும் அழிக்க முடியாது.

புத்தபெருமான் ஒருபோதும் இனங்களை மையமாக வைத்து அழிப்பு நடவடிக்கைகளை செய்யக்கூடாது என தெரிவித்திருக்கின்றார்.
இதை அடிப்படையாக கொண்டு சாதி மத பேதங்களை மறந்து மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்சக்கட்டத்தை எனது அரசில் கொண்டு வருவேன் எனதெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஆகவே அபிவிருத்தி புரட்சியை மன்னாரில் மேற்கொள்ள நீங்கள் 707
கிராமங்களுக்கும்  வீடுவீடாகச் சென்று 52 வயதான இந்த சஜித் பிரேமதாசவை ஜெயிக்கவைத்து அதிகார பகிர்வை கொண்டுவர வழி சமையுங்கள் என இவ்வாறு தெரிவித்தார்.







மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள மீனவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். சஜித் பிரேமதாச Reviewed by Author on November 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.