அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் வைத்து இரா.சம்பந்தன், முன்வைத்துள்ள கோரிக்கை!


ஒருமித்த, பிரிக்கப்படாத நாட்டிற்குள், அதி உச்ச அதிகாரப்பகிர்வின் மூலமாக நியாயமான அதிகாரப் பகிர்வு பெற சஜித் பிரேமதாசிற்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு பிரசார கூட்டம் யாழ். நல்லூரில் உள்ள சங்கிலியின் பூங்காவில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றும் போதே, அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
ஐந்தாவது ஐனாதிபதியாக மைத்திரிபால தெரிவு செய்யப்பட்டார். அவரின் காலத்தில் பல செயற்பாடுகள் நடைபெற்றது. அரசியல் சாசனம் அமைக்கப்பட்டது. பல முன்னேற்றகரமான முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

அரசாங்கத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாகவும், பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட தன்னிச்சையாக மோதல்களினால் அவை நிறுத்தப்பட்டன. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஆறாவது ஜனாதிபதி சஜித் பிரேமதாசவோ, கோத்தபாயவோ வந்தால், அந்தக் கருமம் முன்னெடுக்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறவில்லை.
நாட்டிற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்த வேண்டும். இதுவரை நடைபெற்ற முயற்சிகளை நான் தொடருவேன் என சஜித் சொல்கின்றார். அதி உச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தேர்தல் விஞ்ஞானபத்தில் கூறிய விடயங்கள்.

ஒருமித்த நாட்டிற்குள் பிரிக்கப்படாத நாட்டிற்குள் அதி உச்ச அதிகாரப்பகிர்வின் மூலமாக நியாயமான அதிகாரப் பகிர்வு பெற முடியும். சஜித் தான் ஆறாவது ஜனாதிபதிதியாக இருப்பார். அவர் தெரிவு செய்யப்படாவிடின், கோத்தாவின் அரசாங்கத்தின் கீழ் எதுவும் நடைபெறாது.
கோத்தபாய, சஜித் மாத்திரமல்ல அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய ஜனாதிபதி வரவேண்டுமா இல்லையா என ஒருமித்து ஒன்றாய் நிற்கின்றோம் என இந்த தேர்தல் மூலமாக சர்வதேசத்திற்கு அறிவிக்க வேண்டும்.
ஒரு நாட்டில் ஆட்சி முறையை அமைப்பதற்கு, அதை நடைமுறைப்படுத்த, ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, ஜனநாயக ரீதியாக,
நாட்டில் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.
இறைமையான அதிகாரத்தின் அடிப்படையில் தான் ஆட்சி நடைபெற வேண்டும். என்னமுறையான ஆட்சி முறை வேண்டும். உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பெறக்கூடிய நிலமையை உருவாக்க வேண்டும்.
உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுமாயின், உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற கருமம், வெளியக சுயநிர்ணய உரிமையாக, சர்வதேசத்தின் அடிப்படையில் மாறக்கூடிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரம் வாக்களிக்கவில்லை.

என்னவிதமான ஆட்சி அதிகாரம், உருவாக்க வடகிழக்கு மக்கள் அதை தான் ஆதரித்துள்ளார்கள் என சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், உங்களுக்கு என்னவிதமான அரசியல் தீர்வு வேண்டும். ஆட்சி முறை வேண்டும். யாரை ஆதரிப்பதன் மூலம் அந்த செய்தியை உலகத்திற்கு அனுப்புகின்றீர்கள்.
தமிழ் மக்கள் ஒற்றுமையுடன், பிளவுப்படாமல் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பார்களாக இருந்தால், எமது வாக்குகள் பிரிந்தால், அதிகம் பாதகமான நிலமை ஏற்படும்.
கோட்டாவிற்கு வாக்கக்க கூடாது. தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கும் எவ்விதமான வாக்குகளும் அளிக்காமல் விட வேண்டுமென கேட்டுக்கொண்டால், ந்த மக்களையும், கோட்டாவிற்கு மட்டுமன்றி சிவாஜிலிங்கத்திற்கும் வாக்களிடாது.
எமது மக்களின் அடிப்படை உரிமைகளுடன், எமது மக்களின் எதிர்காலத்துடன், தொடர்புடைய விடயம். இவ்விதமான கருமத்துடன், நாங்கள் விலை போக முடியாது. நாங்கள் உறுதியாக நிற்க வேண்டும்.
டக்ளஸ் தேவானந்தாவிடம் உதவி பெற்றிருந்தால், அவருக்கு வாக்களிக்கலாம், ஏன் கோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும். உதவி பெற்றவர்களிடமும் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனச் சொல்ல வேண்டும்.
மகிந்த ராரஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் உங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். ஒருமித்து வாக்களிக்க வேண்டும்.

அவ்வாறு வாக்களித்தால், நாங்கள் வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எமது மக்களின் அரசியல் பயணத்தையும், எமது மக்களின் குறிக்கோளையும், அடைய முடியும்.
பலவிதமான அபிவிருத்திகளையும், ஒரு நட்பான அரசாங்கத்துடன், எமது பல கடமைகளையும் நிறைவேற்றி, அதன் மூலமாக யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட, மக்களை தூக்கி நிறுத்தக் கூடிய சூழல் உருவாகும்.
ஒரு சாதகமான ஆட்சி வருமாக இருந்தால், எமக்குத் தேவையானவற்றை செய்விக்கலாம். அரசியல் தீர்வு விடயத்திலும், நாங்கள் செய்விப்போம். எமது அரசியல் தீர்வு விடயம் ஒரு முடிவிற்கு வர வேண்டும். முடிவிற்கு கொண்டு வரக்கூடிய நிலமைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று எமது அரசியல் தீர்வினை நிறைவேற்ற வேண்டும். அந்த சந்தர்ப்பம் கையில் இருக்கின்றது. அதனை நாங்கள் இழக்கக்கூடாது. நாங்கள் இந்த தேர்தலில் வெற்றியைக் காண்போமாக இருந்தால், எமது செயற்பாடுகள் நடைபெறும்.
ஒரு தமிழ் வேட்பாளர் ஏன் கேட்கின்றார். அவர் கேட்பதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதைப் பெறப் போகின்றார். அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களுக்கு எதிரானது. தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றவருக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளாக கருதப்பட வேண்டும்.

நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் கோத்தபாய ராஜபக்சவை தவிர வேறு யார் நன்மை பெறப் போகின்றார்.
நீங்கள் 99 வீதம் வாக்களிக்க வேண்டும். அன்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து இரா.சம்பந்தன், முன்வைத்துள்ள கோரிக்கை! Reviewed by Author on November 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.