அண்மைய செய்திகள்

recent
-

உடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை -


1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே.
இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.

இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர்.

இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.
இவ் உலோகமானது கப்பல் கட்டுமானப்பணிகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




உடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை - Reviewed by Author on November 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.