அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டின் முழுவிபரம்

வவுனியா நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன் தலைமையில் 28.11.2019 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பத்துவட்டாரங்களில் வீதிகள் புனரமைப்பு,வடிகால் புனரமைப்புக்கள்,மின் விளக்கு பொருத்தல்,மயானங்கள் புனரமைப்பு உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு வட்டார ரீதியாக கீழ் குறிப்பிடப்படும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

வட்டாரம் தாண்டிக்குளம்-3500000.00,பட்டாணிச்சிபுளியங்குளம்-5500000.00, பண்டாரிகுளம்-3000000.00,வைரவபுளியங்குளம்-3500000.00,குடியிருப்பு-4000000.00,கடைவீதி-4500000.00,மூன்றுமுறிப்பு-4500000.00,இறம்பைக்குளம்-4000000.00,சின்னபுதுக்குளம்-4500000.00,கோவில்குளம்-3500000.00 ரூபாவும் மொத்hமதக வட்டாரங்களுக்கு 40500000.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வட்டாரபராமரிப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக வீதி விளக்கு,வீதி திருத்தப்பொருட்கொள்வனவு,விசேட டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுத்தப்படுத்தலுக்கென மொத்தமாக 8000000.00 ரூபாவும் வருமான மேம்பாட்டிற்காக நகரசபை கலாசார மண்டப திறந்த சாப்பாட்டறை இணைப்பு,நகர மண்டபம் மற்றும் கலாசார மண்டபம் புனரமைப்பு,நகர சபை மைதான விளக்குகள் ஒளியூட்டல் விளையாட்டு மைதான திறந்த வெளி அரங்கு மலசல கூடம் ஓய்வு அறை அமைத்தல் ஆதன மீள் மதிப்பீடு சொத்து முகாமைத்துவம்,பூந்தோட்ட மயான எரியூட்டல் உபகரண தொகுதி புனரமைப்பு,வவுனியா குள சுற்றுலாமையம் மேம்படுத்தல்,உடல் வலுவூட்டல்  பயிற்சியாளர் நியமித்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு 16450000.00ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தின்மக் கழிவு முகாமைத்துவத்திற்கு-600000.00 ரூபாவும் மேலும் சமூக மற்றும் பொது விடயங்களான கர்ப்பிணி தாய்மாருக்கு பால்மா வழங்கல்,கலாசார மற்றும் ஏனைய நிகழ்வுகள் உள்ளுராட்சி வாரம் மற்றும் நடமாடும் சேவை,தேசிய வாசிப்பு மாத நிகழ்வு என்பனவற்றிற்கு 1125000.00 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சபை நிர்வாகம் மற்றும் இதர செலவுகள் உள்ளடங்கலாக மொத்தமாக 85850000.00ரூபா நகரசபையால் 2020ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டதினூடாக ஒதுக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் மற்றும் சபை செயலளரின் ஒத்துழைப்புடன் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

மேலும் பொதுமக்களினதும் சபை உறுப்பினர்களினதும் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் நிதி ஒதுக்கப்பட்டதாக வவுனியா நகர சபையின் தவிசாளர் இராசலிங்கம் கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டின் முழுவிபரம் Reviewed by Author on December 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.