அண்மைய செய்திகள்

recent
-

239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 மர்மம்! விமானம் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு -


மாயமான மலேசிய விமானம் குறித்து புதிய ஆய்வு மேற்கொண்ட எகிப்திய வான்வழி நிபுணரும், பொறியியலாளருமான இஸ்மாயில் ஹமாத், எம்.எச்.370 இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, மார்ச் 8, 2014 அன்று இராணுவ ரேடாரில் இருந்து காணாமல் போனது, அதில், 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

எகிப்திய வான்வழி நிபுணர் பொறியியலாளர் இஸ்மாயில் ஹமாத் கூறுகையில், விமானம் எங்கிருக்கிறது என்று எனக்குதெரியும், மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் பிலிப்பைன்ஸிக்கு கடத்தப்பட்டு இருக்கலாம்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கு நோக்கி சென்ற பின்னர் இராணுவ ரேடார் திரைகளில் இருந்து விமானம் காணாமல் போனது தற்செயலாக நிகழ்ந்தது என்று நான் நினைக்கவில்லை.

ஆனால், மேம்பட்ட திட்டமிடல் மற்றும் துல்லியமான நேரத்தின் படி இந்த கடத்தல் நடத்தபட்டது என்று நான் நினைக்கிறேன்.
கடத்தல்காரன் விமானத்தை பகல் வெளிச்சத்திற்கு சற்று முன் இறக்க விரும்பியிருப்பதாகவும், குறித்த நேரத்தில் தரையிறங்கும் இடத்தை அவர்கள் வடக்கு, தெற்கு அல்லது மேற்கு திசையில் காண வாய்ப்பில்லை என்றும் இஸ்மாயில் கூறினார்.
ஆனால், கடத்தல்காரன் கிழக்கு நோக்கி பறந்திருந்தால், சூரிய உதயத்தின் முன் பிலிப்பைன்ஸின் 7,641 தீவுகளில் தரையிறக்கி இருப்பார் என்று அவர் கூறினார்.

இந்த தீவுகளில் கைவிடப்பட்ட விமான நிலையங்களிலும், தரையிறங்குவதற்கு ஏற்ற சாலைகளிலும் விமானம் தரையிறக்கி இருக்க வேண்டும்.
அதிகாலையில் விமானத்தை தரையிறக்கப்பட்டிருக்கும், ஏனென்றால் கடத்தல்காரன் விமானத்தை தரையிறக்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது, மேலும் கண்பார்வை மட்டுமே நம்பியிருந்திருப்பான்.
இந்த விமானத்தை கட்டுப்படுத்தியவர்கள் இரவில் மீதமுள்ள நேரங்களை ரேடர்களிலிருந்து மறைத்து வைத்திருக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

பிலிப்பைன்ஸ் தீவுகளில் பல இரண்டாம் உலகப் போரின்போது சிறிய இராணுவ விமானங்களுக்காக கட்டப்பட்டன. எம்.எச்.370 பெரும்பாலும் 777 சிறிய தீவு விமான நிலையங்களில் உள்ள குறுகிய ஓடுதளங்களை தரையிறக்கப்பட்டிருக்க வேண்டும்.
விமானத்திற்கான தேடல் இந்த ஓடுபாதைகள் மற்றும் சாலைகளின் முனையங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும், குறிப்பாக காடுகள் மற்றும் புதர்களுக்குள் அமைந்துள்ள பகுதிகள் என்று இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 மர்மம்! விமானம் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு - Reviewed by Author on December 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.