அண்மைய செய்திகள்

recent
-

தீமையும் கொடுங்கோன்மையும் தலைவிரித்தாடியபோது மனுக்குலத்தை மீட்க வந்தவர்தான் இறைமகன் இயேசு


இறை சாயலிலே படைக்கப்பட்ட மனுக்குலம் தீமையின் பிடிக்குள் ஆட்கொள்ளப்பட்டு துன்புற்றபோது தீமையும் கொடுங்கோன்மையும் தலைவிரித்தாடியபோது மனுக்குலத்தினை விடுவிக்க கடவுள் மனிதனாக வந்த அதி உன்னத நிகழ்வே கிறிஸ்து பிறப்பு.

அதாவது கடவுள் மானிடரை தேடிவந்தது. மனிடராக பிறந்தது தன்னை ஈகம் செய்து மனுக்குலத்ததை தீமையின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகும்.

-எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக ஆண்டவராகிய
மெசியா நமக்காக தாவீதின் ஊரில் மரியாளுக்கு பிறந்த மாபெரும் நிகழ்வை
இன்று (25) நினைத்து மகிழ்ந்து உலக  இறைமக்கள் கொண்டாடுகின்றார்கள்.

-தொடக்கத்தில் கடவுளோடும் கடவுளாயும் இருந்த வாக்கு மனிதராகி மக்களிடையே குடிகொள்ள வந்த நிகழ்வாகிய இந்த கிறிஸ்மஸ் விழாவை உலகம் இன்று பெருவிழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி சிறப்பிக்கின்றது.

-ஏனெனில் இயேசுவின் பிறப்பு இருளில் இருந்த மக்களுக்கு அது பேரொளி.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள மக்களுக்கு சுடர் ஒளி. அமைதியற்ற மக்களுக்கு
அமைதியின் அரசர்.

-துன்புறும் ஒவ்வொருவரையும் அதிலிருந்து மீட்டு நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாக தூய்மைபடுத்தும் இறை மகனாக இவ்வுலகில் பிறந்த நாள்தான் கிறிஸ்மஸ்.

-ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர், ஒடுக்கப்பட்டோர்
இவர்களுக்கெல்லாம் நற்செய்தியாகவும் விடுதலை கொடுப்பவராகவும் நலம்
அளிப்பவராகவும் வந்துள்ளவர்தான் மரியாளின் திருவயிற்றில் உதித்துள்ள இந்த திவ்விய பால-இத்தகைய இயேசுவின் பிறப்பானது ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று இருந்தாலும் இது முடிவடைவதில்லை.

-மாறாக தினமும் ஒவ்வொருவரினதும் இதயங்களிலும் இல்லங்களிலும்
சமூகங்களிலும் பிறக்கின்ற ஒன்றாக அமைய வேண்டும்.

இயேசுவின் பிறப்பில் மிகவும் சாதாரண மக்களாகிய இடையர்களுக்கே முதலில் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி வானதூதரால் அறிவிக்கப்பட்டது.


மேற்படி கிறிஸ்துவின் பிறப்பினை அறிவித்த இறை தூதர் 'அஞ்சாதீர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன் இன்று ஆண்டவராகிய மெசியா எனும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்'(லூக்கா.2:10)என இறைமகன் இயேசுவின் பிறப்பின் உன்னத நோக்கத்தினை சிறப்பாக எடுத்தியம்புகிறார்.

இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீனா நாட்டிலே ஆண்டவர் இயேசு பிறந்தபோது பலவிதாமன அச்சமும் அடிமைத்தனமும் இருளும் மக்களைச் சூழ்ந்திருந்தது. ரோமப் பேரரசின் ஆக்கிரமிப்பின் அடிமைத்தனம் மதவாதிகளின் ஒடுக்குதல்
பல்வேறு சமூகம்சார் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கோலோச்சிய சூழல்.
இப்படிப்பட்ட சூழலிலே இறைமகனின் பிறப்பு நிகழ்ந்தது

அன்று மக்களை ஆக்கிரமித்து இருந்த தீமையினையும் ;வன்முறையினையும்
கொடுங்கோன்மையினையும் அகிம்சை, நீதி, அன்பு, மன்னிப்பு, சமாதானம்,
ஒப்புரவாதல் என்கின்ற உயரிய விழுமியங்களால் தகர்த்து மனுக்குலத்தினை
விடுதலையாக்கி மானிடமான்பினை அளித்து வாழவைப்பதே இப் பிறப்பின்
நோக்கமாகவும் இருந்தது.

தீமையினை தீமையினால் அல்ல மாறாக தீமையினை நன்மையினால் வெல்லவேண்டும் வன்முறைக்கு மாற்றீடாக அகிம்சையினையும் போருக்கு மாற்றீடாக சமாதானத்தினையும் உலகிற்கு அறிமுகம் செய்துவைத்து. புதிய மானுட கலாச்சாரத்தினை ஆரம்பித்து வைத்தவர்தான் இன்றைய நாளில் பிறப்பு விழாவின் நாயகன் கிறிஸ்து. அவ்வழி முறையினையும் நாமும் பின்பற்ற அழைக்கப்படுகின்றோம்.

எழுபதாண்டுகள் தொடர்ச்சியான ஓடுக்குமுறைச் சூழலிலும் முப்பதாண்டுகள்
கொடியபோரின் கொடுந்துன்பத்தாலும் பத்தாண்டுகளுக்கு முன்னர் இன்
நூற்றான்டின் உலகின் மிகப்பெரிய இன அழிப்பைச் சந்தித்தும் அதற்குப்
பின்னர் தற்போதுவரை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பபைச்
சந்தித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் வரலாற்றுச் சுற்றோட்டத்தில்
தொடர்ந்தும் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது

 இன்றய சூழலில் மானிட சமுகம் எதிர் கொள்ளும் மிகப்பெரும் சவால்களாக
வன்முறைக்கும் கலாச்சார பிறல்வு, பண்பாட்டு சீர்கேடு மற்றும்
போதைப்பொருள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு தமது உறவுகளை
தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள், தொடர் ஏமாற்றுதலாக உள்ள அரசியல்
கைதிகளின் விடுதலை, போதப் பொருள் பாவனை என்பவற்றால் தடுமாறிக்
கொண்டிருக்கும் இளம் சமுகம், சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான
வன்முறைகள் துன்புறுத்தல்கள்; ஆகும்.

அத்துடன் வியாபார மயமாகிவிட்ட கல்வி, மீளெர்ச்சியடைந்துவரும் மதவாதமும்சாதியமும்.; எமது சூழலில் மனுக்குலம் எதிர் கொள்ளும் சவால்களாகும்எனவே இறைமகனின் பிறப்பினை எதிர்கொள்ளுகின்ற நாம் மேற்குறிப்பிட்டதீமையினதும் கொடுங்கோன்மையினதும் பிடியில் இருந்து மனுக்குலத்தினைவிடுவிக்க ஆண்டவர் இயேசுவின் பாதையில் செயற்பட அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் பிறப்பில் மிகவும் சாதாரண மக்களாகிய இடையர்களுக்கே முதலில்           மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி வானதூதரால் அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்துவின் பிறப்பானது கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளிலே நாம் கட்டி வைத்திருக்கும் கோயில்களிலே அல்லது கோபுரங்களிலே போன்று அல்லாது அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவராக இருந்தார்.

-அவர் மனிதர் உள்ளங்களிலே பிறப்பதற்காகவே இவ்வாறான நிலையில் பிறந்துள்ளார். -இன்று மக்கள் அச்சத்துடன் பொருளாதார சுமையுடன் கடன் தொல்லையுடன் வாழந்து வரும் இந்த நிலையில் அன்று யூத சமூதாயத்திலும் தங்களுக்கு ஒரு மெசியா பிறப்பார்.

தங்களை அடிமைத்தனத்திலிருந்து எங்களை மீட்பார் என்ற ஒரு நம்பிக்கையும் அவர்களிடத்தில் எதிர்பார்ப்பும் இருந்தது.

-இந்த சமயத்தில்தான் கடவுள் மனிதனை தேடி வந்துள்ளார். இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் மீளவும் நினைவூட்டும் நாளாகவே இந்த கிறிஸ்மஸ் விழா ஒவ்வொருவருக்கும் அமைய வேண்டும்.

-இன்று ஒவ்வொருவரும் பல ஏக்கங்கள் அச்சம் நிறைந்த வாழ்க்கையுடன்
இருந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை எடுத்தியம்பும் நாளாக
இந்த கிறிஸ்மஸ் விழா நினைவூட்டுகின்றது.

-இன்று அரசியல் வெற்றியில் பலருக்கு அச்சம் இருக்கலாம் அல்லது யுத்த
வெற்றியில் பலருக்கு அச்சம் இருக்கலாம் இன்றைக்கு நாளைக்கு என்ன நடக்கும் என்ற பய உணர்வுகள் இருக்கலாம்

ஆனால் கிறிஸ்து வன்முறைக்கு மாற்றீடாக சமாதானத்தை கொண்டு வந்தவர்தான் இவர் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் எம் உள்ளத்தில் குடிகொள்ளும்போது கிறிஸ்து பிறப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும் அர்த்தமுள்ள நத்தாரையும் நாம் உண்மையாக அனுபவிக்க முடியும்.

L.G.வாஸ் கூஞ்ஞ
சிரேஷ்ர  ஊடகவியலாளரும்  மறைவாழ்வுப்பணியாளரும்.

தீமையும் கொடுங்கோன்மையும் தலைவிரித்தாடியபோது மனுக்குலத்தை மீட்க வந்தவர்தான் இறைமகன் இயேசு Reviewed by Author on December 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.