அண்மைய செய்திகள்

recent
-

ஒற்றுமை,சகோதரத்துவம்,சக வாழ்வு ஏற்பட வேண்டும் என்றால் விழுமியங்கள் எல்லா சமையங்களிலும் வாழ வேண்டும்- முஹம்மது நபி அவர்களுடைய பிறந்த தின விழாவில் அருட்தந்தை S.அன்ரன் அடிகளார்

பொதுவான விடையங்களில் நாங்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்றாக வாழ முயற்சிக்கின்ற போது நமது வேற்றுமைகளை களைந்து ஒரு சமைய,சமூக, சக வாழ்விற்கான பாதைகளை கண்டு கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும் என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் சர்வமத பிரதி நிதிகள் மற்றும் சர்வ மத தலைவர்களை ஒன்றிணைத்து முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய பிறந்ததின விழா இன்று புதன் கிழமை (11) காலை 10 மணியளவில் நானாட்டான் அளவக்கை கார்மேல் மாதா ஆலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,,,,

சமையங்களினுடைய விழாக்களை கொண்டாடுவதன் நோக்கம்,ஏன் அந்தந்த சமையங்கள் விழாக்களை கொண்டாடுகின்றார்கள்?அதனுடைய முக்கியத்துவம் என்ன? அதிலிருந்து ஏனைய சமையத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய விடையம் என்ன? இந்த விழாவின் ஊடாக சமையங்கள் சொல்லுகின்ற செய்தி என்ன என்பதை எல்லாம் விளங்கிக் கொண்டு ஒரு சமையத்தை இன்னும் ஒரு சமையத்தை பின் பற்றுகின்றவர்கள் மதிக்க வேண்டும்.

அவர்களுடன் நல் உறவோடு வாழ வேண்டும் என்பது தான் இந்த விழாக்களை நாங்கள் சர்வமத அமைப்பினூடாக கொண்டாடுவதன் நோக்கமாகும்.
அனைவருடைய கருத்துக்களையும் பார்க்கின்ற போது எல்லா சமையங்களுக்கும் பொதுவான விழுமியங்களாக அக்கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.
இந்த விழாக்களை கொண்டாடுகின்றதன் நோக்கம் இன்றைய நாளிலே நிறைவேறி உள்ளது என்ன என்றால் நல்ல விழுமியங்கள் தான் மனிதர்களை நல்லவர்களாக இந்த உலகத்திலே வாழ வைக்கின்றது.

ஒற்றுமை,சகோதரத்துவம்,சக வாழ்வு ஏற்பட வேண்டும் என்றால் விழுமியங்கள் எல்லா சமையங்களிலும் வாழப்பட வேண்டும்.ஒரு சமையத்திற்கு அந்த சமையத்திற்கு உரித்தான விழுமியங்கள் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் பல விழுமிங்கள் பொதுவானதாக இருக்கின்றது.

பொதுவான விடையங்களில் நாங்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்றாக வாழ முயற்சிக்கின்ற போது நமது வேற்றுமைகளை களைந்து ஒரு சமைய,சமூக,சக வாழ்விற்கான பாதைகளை கண்டு கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

-நான்கு அல்லது ஐந்து கிராமங்களை உள்ளடக்கி மேற்கொள்ளுகின்ற சிறிய முயற்சிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் ஒவ்வெருவரும் முயற்சிகளை எடுத்து ஒற்றுமையை மற்றவர்களுக்கு காட்டுகின்ற பொழுது சமயத்தைக்கடந்த சகவாழ்வை,சகோதரத் துவத்தை நம் மத்தியில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

சக வாழ்வு என்றால் எமது சமையங்களை விட்டு விட்டு வருவது என்ற அர்த்தம் இல்லை.எங்களுடைய சமையங்களை நல்ல முறையில் நாங்கள் பின் பற்றி அதனூடாக வரக்கூடிய நல்ல விழுமியங்களை ஒட்டு மொத்தமாக நாங்கள் வாழ முயற்சிக்கின்ற போது சமையத்தைக் கடந்த சக வாழ்வு நம் மத்தியிலே உறுவாகும்.

எவ்லோறும் சமமானவர்கள். எமக்கு மத்தியில் உள்ள உயர்வு,தாழ்வுகளை களைந்து எனது சமையம் தான் முக்கியம் என்கின்ற மன நிலைகளை களைந்து ஒற்றுமைப்படுகின்ற விழுமியங்களிலே நாம் இணைந்து சமைய சகவாழ்வை உறுவாக்குவதற்கு இத்தகைய விழாக்கள் எமக்கு உறு துணையாக அமைய வேண்டும்.

இங்கு வந்துள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து மேடையில் இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு அடையாளம்.இங்கிருந்துதான் மக்களுக்கு விடையம் கொண்டு செல்லப் படுகின்றது. மேடையில் இருக்கின்ற சமையத் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து செயல் பட்டு ஒற்றுமையையும்,சக வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதற்கு எல்லோறும் முயற்சிக்க இறைவன் துணை புறிய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

-இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,மௌலவிகள்,சர்வமத குழுக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











ஒற்றுமை,சகோதரத்துவம்,சக வாழ்வு ஏற்பட வேண்டும் என்றால் விழுமியங்கள் எல்லா சமையங்களிலும் வாழ வேண்டும்- முஹம்மது நபி அவர்களுடைய பிறந்த தின விழாவில் அருட்தந்தை S.அன்ரன் அடிகளார் Reviewed by Author on December 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.