அண்மைய செய்திகள்

recent
-

-மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டி விருது வழங்கி கௌரவிப்பு-(படம்)

மனித உரிடையை பிரகடனப்படுத்திய நாளாக மார்கழி மாதம் 10 ஆம் திகதியை உலகமெங்கும் சர்வதேச மனித உரிமைகள் நாளாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இவ் வருடத்தை 'மாற்றத்தின் ஆக்க பூர்வமான முகவர்கள்' எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களை அழைப்பதுடன் மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயல் பட்ட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் இன்று (14) சனக்கிழமை காலை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட சரூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் உப்புக்குளம் விருந்தினர் மாளிகையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட சரூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ தலைமையில் இடம் பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஸ்ட  ஊடகவியலாளர்களான புகழேந்தி லோறன்ஸ் கொன்சால் வாஸ்கூஞ்ஞ, என்.யூட்ஸ் பெலிஸ்ரஸ் பச்சேக்,பி.அந்தோனி மார்க்,எஸ்.றொசேரியன் லெம்பேட், மற்றும் கனிஸ்ட ஊடகவியலாளர்களான வை.கஜேந்திரன்,ஜே.நயன், ரா.ஜீவகன்,ர.ரவிக்குமார்,சே.ஜெகதீஸ்வரன் ஆகிய 9 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு,சிவில் அமைப்புக்களில் நீண்டகாலமாக சேவையாற்றிய மன்னாரைச் சேர்ந்த பேதுரு பெனடிக்ற் என்பவரும் விருது வழங்கி கௌரிக்கப்பட்டார்.

-குறித்த நிகழ்வில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்,முருகன் கோயில் பிரதம குரு மஹா தர்ம குமார குருக்கள்,மன்னார் மூர்வீதி ஜீம்மாப்பள்ளி மௌலவி எஸ்.ஏ.அஸீம்,அருட்பனி பத்திநாதன்,மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டதோடு,ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

-குறித்த நிகழ்வில் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








-மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டி விருது வழங்கி கௌரவிப்பு-(படம்) Reviewed by Author on December 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.