அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் மன்னாரில் இருந்து விசேட குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பிற்குச் சென்று முன்னாள்   பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள்   பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ரி.பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய பற்றாக்குறை தீர்வாக நோயாளிகள் எதிர் நோக்கும் பிரச்சிணைகளுக்கு தீர்வு காணுவதோடு,விசேட மருத்துவ பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் பற்றாக்குறைக்கான நிவர்த்தி செய்தல்.

-மாவட்ட ரீதியில் அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பினை அரச தேவைகளுக்கு அப்பாற்பட்டு கையகப்படுத்துவதை தடை செய்தல்.

மாவீரம் மற்றும் போராளிகள் சம்மந்தமான விடையங்களை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளுதல்.

மாவட்ட ரீதியில் சில அரசியல் உள் நோக்கம் கொண்டவர்களினால் முன்னெடுக்கப்பட்ட மத குரோத நிலமையை இல்லாதொழித்தல்.
-பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்தல்.

-படித்த இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பல்வேறு துறைகளிலும்தகுதிகள் அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல்.

அரச துறைகளில் அரசியல் பழிவாங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாட்டினை இடைநிறுத்தல்.

விவசாயம் மற்றும் மீன்பிடியாளர்கள் எதிர் நோக்ககின்ற பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் ஊடாக தீர்வு காணல்.

மாவட்டத்தில் காணப்படுகின்ற விளையாட்டுத்துறையினரின் குறை நிறைகளை கேட்டறிந்து அவற்றுக்காண தீர்வை பெற்றுக்கொடுத்தல்.

இளைஞர்கள் எதிர் நோக்குகின்ற அரசியல் சவால்களை எதிர்கொண்டு அவர்களுக்கு எதிர்காலத்தில் சரியானதொரு அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்தல் உற்பட பல்வேறு விடையங்கள் தொடர்பாக நீண்ட நேரம் முன்னாள்   பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது பதில் வழங்கிய முன்னாள் பிரதி அமைச்சர் குறித்த பிரச்சினைகள் தொடர்பாகவும் உடன் தீர்க்கப்பட வேண்ய விடையங்கள் தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் அனுகியும்,பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் Reviewed by Author on December 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.