அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத்திறனாளியின் மனக்குமுறல்...மன்னார் பெனில்.

உலகமாற்றுத்திறனாளிகள் தினமான இன்று 03\12\2019

மாற்றுத்திறனாளியின் மனக்குமுறல்...

சாறு பிழியப்பட்ட திராட்சைபோல
பொலி(வலு)விழந்த எம்
வாழ்வோடு போட்டிபோடும்
சாணக்கிய சமுதாயமே
எதைனைச் சாதிப்பதற்கிய்
எமைச் சோதிக்கிறாய்...

உங்களுக்கு நிகராய்
ஓடமுடியாவிட்டாலும்
ஆமைபோல நகர்ந்து
எல்லைக்கோட்டைத்தொட
எம்மாலும் முடியும்.

முடிவில் இருந்து ஆரம்பிக்கும்
ஓட்டத்திற்கு சான்றுதல் இல்லைதான்
தொடக்கத்திலிருந்து துரத்தும்
நீங்கள் எல்லைக்கோட்டைத்
தொடுவதற்காய்
அடுத்தவன் கோட்டுக்குள்
நுழைவதனால் வீணாகிப்போகிறது
உங்கள் வீரியம்....

வார்த்தைகளால் வசைபாடி
எமை வதைக்கலாம்
எம் எதிர்காலத்தைச் சிதைக்கலாமென்றே
ஊனம் சொத்தி செவிடு குருடு
முடமென வார்தைகளை
லாபகமாக வீசினிரீகள்
உண்மையைத்தான் சொல்கிறீர்கள்
என்றே கடந்துபோகின்றோம்......

பரிதாபம் பார்க்கத்தோன்றவில்லை
பங்கம் விளைவிக்க
மாற்றுத்திறனாளிகள் எனும்
அழகிய நாமத்தை வழங்கி
ஒட்டியுறவாடி ஊர் உலகத்துக்காக
நன்றாகவே நடிக்கிறீர்கள் மேடையேறி....  

சம உரிமையுமில்லை
முன்னுரிமையும் இல்லை
இருப்பதை பறிக்க எம் மூக்கில்
உங்கள் விரல்கள்
போதும் விட்டு விடுங்கள்
 எமைச் சிதைக்க நீங்கள்
எடுக்கும் சாணக்கியத் திட்டங்களை....

அழகாய் உடுத்திக்கொண்டு
புன்னகைத்த முகங்களோடு
சமூக வலம் வருதல் கண்டு
எமை வெறித்துப்பார்க்கும்
சாணக்கிய சமுகமே....!!!

நீ நினைவில்கொள்
தட்டையேந்தி யாசகம் கேட்குமளவு
தாழ்ந்திட மாட்டோம்
அதுபோலவே நீங்கள் வெட்டும்
குளியில் வீழ்ந்து  மாண்டிடவும் மாட்டோம்.

சமுக சாணக்கியத்தை
மாற்றும் மாற்றுத்திறனாளிகளாய்
பலர் போற்றும் மாற்றுத்திறனாளிகளாய்
நாமிருப்போம் ஜீவனுள்ளவரை

மன்னார் பெனில்.
மாற்றுத்திறனாளியின் மனக்குமுறல்...மன்னார் பெனில். Reviewed by Author on December 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.